உள்நாட்டு அரசியலில் எதிர்ப்பு மேலெழும் என்பதாலேயே
இந்தியா தலையிடவில்லை
கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி | நேர்காணல்
ஆர். ராம்
தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பிலான
தகவல்கைள இந்தியா அறிந்திருந்தும் இலங்கையின் உள்நாட்டு விடயமான பாதுகாப்பில் அளக்கு
மீறி தைலயிட்டால் அது
இலங்ைக அரசியலில் இந்திய எதிர்ப்பை மேலழச்செய்ய வழி வகுக்கும் என்பதாலேய பொறுமையாக
இருந்தது என்று இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும், தெற்காசியாவில்
பயங்கர வாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள்
ஒருவரும், எழுத்தாளருமான கேர்ணல் ஆர். ஹரிகரன் வீரேகசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய
விசேட செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் வடிவம்;
கேள்வி; தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாதுகாப்பு
துறைக்கு தகவல்கள் கிடைத்ததாகவும், இந்திய புலனாய்வுத்துறையான ரோ ஏற்கனவே தகவல்களை
வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. இதுபற்றி தகவல்களை தாங்கள் ஏதும் அறிவீர்களா?
பதில். இந்த தகவல் இந்தியா பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிராக விசேஷமாக அமைக்கப்பட தேசிய ஆய்வுக் குழு (National Investigation Agency - NIA) சந்தேகத்தின் பேரில் கைதான ஒரு தீவிரவாதியை விசாரணை செய்யும் போது தற்செயலாகத் தெரியவந்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த தகவலை இந்தியா இலங்கை அரசுக்கு அளித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்தியது. இலங்கை அரசுக்கு அளித்த குறிப்பில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் தாக்கப் படலாம் என்ற விவரமும் அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் தற்கொலைத் தாக்குதல்களை தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைவர் முகமது சஹ்ரான் நடத்த திட்டம் இடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. .
கேள்வி. இந்திய புலனாய்வு கட்டமைப்புக்கு இந்த சம்பவம் குறித்த தகவல்
கிடைத்திருக்கின்றது என்றால், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் குழுவில் இந்த விடயம் கவனத்தில்
கொள்ளப்பட்டு கலந்துரையாடப்
பட்டதா?
பதில். இந்திய அரசு அமைப்பில் தேசிய பாதுகாப்பு குழு, அதற்கு மேல் இறுதி முடிவு எடுக்கும் மந்திரி சபையின் பாதுகாப்பு குழு ஆகிய இரு அமைப்புகளும் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் விவாதிப்பது வழக்கம்.
2014ல் சென்னையில் இலங்கையைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞர் ரயில் வாகனத்தில் ஒரு வெடிகுண்டை வெடித்த பின்பு இந்திய உளவு நிறுவனங்கள் இலங்கை மூலமாக பாகிஸ்தான் அரசு உதவியுடன் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவலை தவிர்க்க இலங்கை உளவு நிறுவனங்களுடன் ஒத்துழைத்து வருகிறார்கள்.
மற்றும் 2014ல் இருந்து உள்துறையும் தௌஹீஅத் இயக்கங்களின் செயல்பாடுகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆகவே சஹ்ரான் ஹசிம் தலைமையிலான தேசிய. தௌஹீத். ஜமாஅத் நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களை அறிந்திருப்பார்கள். ஆகவே ஏப்ரல் மாதத்தில் இந்தியா இலங்கைக்கு அனுப்பிய ஜமாஅத் தாக்குதல் பற்றிய விவரங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குழுவில் அளிக்கப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும்.
கேள்வி. நியூஸிலாந்து சம்பவத்திற்கு பழிதீர்ப்பதற்கு இலங்கை இலக்கு வைக்கப்பட்டது என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ளமுடியுமா?
பதில். இத்தகைய பெரும்
தாக்குதலை ஈஸ்டர்
திருநாள் அன்று
நடத்த
நிச்சயித்து அதற்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க பல
மாதங்களுக்கு முன்பே
பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி
இருக்க
வேண்டும். ஆனால்
நியூஸிலாந்து தாக்குதலுக்குப் பின்னர் இந்த
தாக்குதல்கள் நடத்தியதால் உலகுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் சிரியாவிலும் ஈராக்கிலும் ஏற்பட்ட இழப்புகளுக்கு பின்பும் தனது
வலிமை
குறைவில்லை என்பதை
எடுத்துக் காட்டியுள்ளது. ஆகவே
தோல்வியால் மனம்
சோர்ந்த ஐ. எஸ். போரிளிகளுக்கும், தாக்குதல்கள் ஊக்கமூட்டுவதாக இருக்கின்றன.
கேள்வி. இலங்கையினை தீவிரவாதிகள் இலக்குவைப்பதற்கு அடிப்படையில் என்ன காரணம் இருக்கும் என்று கருதுகின்றீர்கள்?
பதில். இலங்கையில் மதவாதிகளுக்கும், இன வாதிகளுக்கும் பல ஆண்டுகளாகத் தொடரும் காழ்புணர்ச்சி ஓரளவு குறைந்ததாலும், அது முழுமையாக மறையவில்லை. மத, இன வாதிகளை அரசியல் கட்சிகள் முக்கியமாக புத்த மதப் பேரினவாதிகளை தங்களது ஆதாயத்திற்காக தூண்டிவிட்டு முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்களை 2014 மற்றும் 2018லும் நிகழ்த்தியதாலும்., அவர்களை உடனுக்குடன் களைந்து எறிய அரசு மெத்தனமாக இருந்ததோடு, கையாலாகாத்தன்மையில் இருந்ததும் நாடறிந்த உண்மை. இதனால் இஸ்லாமிய மக்கள் மனக்கசப்பு அடைய, அவர்களிடையே தௌஹீத் ஜமாஅத் போன்ற மதவாத இணைப்புகள் கடுப்போக்கில் நடத்திய தீவிரவாத ஆதரவுப் பிரசாரம் ஓரளவு வெற்றி கண்டது. மேலும் இந்த கலக்கமும்
குழப்புமுமானதான உள்நாட்டு சூழ்நிலையையும் அரசின் உட்பூசலால் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு
ரீதியான செயற்பாட்டில் காட்டிய மெத்தனப்போக்கும், தாக்குதல்கள் வெற்றி காணும் சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது கண்கூடு.
கேள்வி. இலங்கையில் தாக்குதல்கள் நடைபெறும் என்பதை அறிந்தும் இந்தியா பிராந்திய பாதுகாப்பு கருதி தலையீடு செய்யாமைக்கு அல்லது அதிக கரிசனை கொண்டு விழிப்பூட்டமைக்கான காரணம் என்ன?
பதில். இலங்கை இந்தியா நெருங்கிய நட்புறவு கொண்ட நாடு. ஆனால் இந்தியா வலிமைவாய்ந்த நாடு என்பதால் இலங்கையின் உள்நாட்டு விடையமான பாதுகாப்பில் அளவுக்கு மீறி தலையிட்டால் அது இலங்கை அரசியலில் இந்திய எதிர்ப்பை கிளறிவிடவும். 1987ல் இந்தியா பெருமளவில் இலங்கையில் தலையிட்டதால் ஏற்பட்ட பக்க விளைவுகள் இன்றுவரை நீடித்துக்கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததொன்றாகும்.
கேள்வி. இலங்கைளின் பாதுகாப்புத்துறையில் பலவீனம் இருக்கின்றது என்று கருதுகின்றீர்களா?
பதில். இலங்கை பாதுகாப்பு படைகள் திறமை வாய்ந்தவை என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் இலங்கையைப் போன்ற ஜனநாயக நாட்டில் அவை எவ்வாரு செயல்பட வேண்டும் என்பதை அரசே நிர்ணயிக்க வேண்டும். அத்தகைய வழிநடத்துதலில் உள்ள குறைபாடுகளை ஈஸ்டர் தாக்குதல்கள் எடுத்து காட்டியுள்ளன. அதனால் பாதுகாப்பு படைகளை குறை சொல்லுவதில் பயனில்லை என்பதே என் நிலைப்பாடு.
கேள்வி. இலங்கை மீதான தாக்குதல் பிராந்திய பாதுகாப்பில் செல்வாக்கினை செலுத்துவதால் இந்தியா இதுபற்றி எத்தகைய கரிசனையை கொள்கிறது?
பதில். நான் ஏற்கனவே உங்களுக்கு செவ்வி ஒன்றில் இது பற்றி விளக்கம் கூறியுள்ளேன்.
இந்தியாவும் இலங்கையும் பூகோள ரீதியாக தொப்புள் கொடி இணைப்புக் கொண்டவை. ஆகவே ஒரு நாட்டுக்கு ஏற்படும் பாதுகாப்பு விளைவுகள் மற்றவரையும் பாதிக்கும். ஆகவே இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, எந்த அரசு பதவி ஏற்றாலும் இந்த விசேட உறவை நினைவு கொண்டே செயல்படும். அந்த வகையிலேயே இந்தியா கரிசனை கொள்ளும்.
கேள்வி. இலங்கையின் கடற்படை கட்டமைப்பு மற்றும்
கடலோரக்காவல் பற்றி உங்கள் பார்வை எவ்வாறு உள்ளன?
பதில். கடலோரக்காவல் கட்டமைப்பு எவ்வளவு திறமையுடன் செயல் பட்டாலும் திறைகடல் பரப்பில் ஊடுருவலை 100 க்கு 100வீதம் நிறுத்துவது கடினம். எனினும் இலங்கையின் கடற்படை
மேலும் வலுவாகவும் எந்நேரமும் கண்காணிப்புடனும் இருக்க வேண்டும்.
கேள்வி.
உயிர்த்த ஞாயிறில் நடைபெற்ற வெடிப்புச் சம்பவங்களில் ரி.ஏ.ரி.பி குண்டுகள் பயன்படுத்தப்
பட்டதாக படைத்தரப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனை உள்நாட்டில் தயாரித்திருக்க
முடியுமா? அவ்வாறாயின் இக்குண்டுகளுக்காக இரசாயன பதார்த்தங்கள் வெளிநாட்டிலிருந்து
கொண்டு வரப்பட்டிருக்குமா?
பதில். ரி.ஏ.ரி.பி (TATP) தயாரிப்புக்கான மூலப் பொருட்களான அசிடோன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடும் இலங்கையில் எளிதாக கிடைக்க கூடியவை. உதாரணமாக அசிடோன் பெயிண்ட் அடிக்க உதவும் பொருள். அதுபோல் ஹைட்ரஜன் பெராக்சைடும் மருத்துவத்தில் உபயோகிக்கப் படுகிறது. ஆகவே அவற்றை வியாபார ரீதியாக இறக்குமதி செய்ய தடை இருந்திருக்காது. ஆனால் அவற்றை உபயோகித்து வெடிகுண்டு தயாரிப்பின் நுணுக்கம் கற்றவர் யார் என்பதே கேள்வி..