Wednesday, 23 June 2021

தமிழ்நாட்டின் கோடிப்புறத்தில் வளரும் சீன நிழல் - கேணல் ரமணி ஹரிஹரன்

 


22-06-2021  https://thinakkural.lk/article/124867 

இலங்கையில் கடந்தமாதம் துறைமுக நகர சட்டம் நிறைவேற்றப் பட்டமையால்  பாக்குநீரிணையின் இரு மருங்கிலும் வாழும் மக்கள் மத்தியில் விசனமும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.கொழும்பு துறைமுகத்தை எதிர்நோக்கியவாறு நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுகநகரத்தில் விசேட பொருளாதார வலயம் சீனாவின் கட்டுப்பாட்டில் வருவதன் விளைவாக தென்னிந்தியாவுக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல் பற்றி ஊடகங்கள் பெருமளவு பரபரப்பை தோற்றுவித்து வருகின்றன.


அடுத்த இரண்டு தசாப்தங்களில் கொழும்பு துறைமுக நகரம், துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச நிதியியல் மையமாக முழுமை முதிர்ச்சியுடையதாக  வளரப்போகிறது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், சீனஅரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்புகள் நிர்மாண கம்பனியின் ஒரு துணை நிறுவனமான சீன துறைமுக பொறியியல் கம்பனி 85 வீதமான நிலத்தின்  குத்தகை உரிமையை 99 வருடங்களுக்கு கொண்டிருக்கும்.

கொழும்பு துறைமுகநகரத்தினால் தோற்றுவிக்கப்படக்கூடிய பீதி வெறுமனே தென்னிந்தியாவுக்கு மாத்திரமானதல்ல, முழு இந்தியாவுக்குமானது. உண்மையில்,  வர்த்தகரீதியாக நோக்குகையில் கொழும்பு துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றெல், இந்தியாவின் 70சதவீதமான கொள்கலன் போக்குவரத்துக்கள் இந்த துறைமுகமூடாகவே நடைபெறுகிறது. மூலோபாய நிலைவரங்களில், கொழும்பு துறைமுகத்துக்கு நெருக்கமான சீனப்பிரசன்னம் வித்தியாசமான சூழ்நிலையை ஏற்படுத்தும். ஆனால், அதையும் விட  கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு. வர்த்தகமும் வாணிபமும், தொலைத்தொடர்பும் நிதியியலும் உட்கட்டமைப்புகள் என்று பன்முக சீன நலன்களை கொழும்பு துறைமுகநகரம் சட்ட ரீதியானவையாக்குகிறது.

இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்கத்தை  சவாலுக்குள்ளாக்குவதில் சீனாவுக்கு ஒரு பெரிய அனுகூலத்தை  கொடுக்கிறது. அத்துடன் இது அபிவிருத்தி உதவி என்ற பெயரில் இந்தியாவின் அயலகத்தில் செல்வாக்கை மேம்படுத்த சீனா அதன் ஈடிணையில்லா பணப்பல ஆற்றலை பெருக்கவும் உதவும்.

இலங்கையில் அதிகரிக்கும் சீன செல்வாக்கு குறித்து பல இலங்கை தலைவர்கள் கவலைப்படவும் செய்கிறார்கள்.

கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மல்கம் ரஞ்சித் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.  ” அபிவிருத்தி என்பது நாட்டின் வளங்களை விறபனை செய்வதல்ல…….நாட்டைப் பாதுகாப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்.தயவுசெய்து எமது நாட்டை வேறுநாடுகளுக்கு கொடுக்காதீர்கள்” என்று அவர் கேடடிருக்கிறார்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க  நாடு எதுவுமாகவில்லை, சீனாவின் காலனியாக மாறுகிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

விசேட பொருளாதார  வலயம் சீனாவுக்கு வர்த்தக, நிதித்துறை நன்மைகைளை மாத்திரம் வழங்கவில்லை. ஆனால், அது இந்தியாவின் தொலைத் தொடர்பு கட்டமைப்புகளுடன் தலையீடு செய்து ஒற்றுக் கேட்பதிலும் போர்க்கப்பல்களின் நடமாட்டங்களை அவதானிப்பதிலும்  இணையவெளி அச்சுறுத்தலை அதிகரிப்பதிலும் சீனாவின் புலனாய்வு மற்றும் எதிர்ப்புலனாய்வு நடவடிக்கைகளை பெருக்கச்செய்யும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக விசேட பொருளாதார வலயம்  இந்திய நலன்களுக்கு எதிரான முகவர்கள் ஊடுருவி செயற்படக்கூடிய வசதியான இடமாக எளிதாக மாறிவிடும் வாய்ப்பும் இருக்கிறது. கடந்த காலத்தில் கொழும்பில் உள்ள   பாகிஸ்தான் தூதரகத்தின் ஊடாக  பாகிஸ்தான் முகவர்களும் பயங்கரவாதிகளும் தென்னிந்தியாவுக்கு அனுப்ப பட்டார்கள்.

அத்தகைய முயற்சிகளை தடுப்பதற்கு குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் கரையோரங்களிலும் விமானநிலையங்களிலும் பாதுகாப்பை கடுமையாக பலப்படுத்தவேண்டியிருந்தது.

இலங்கையின் உன்னதமான பூகோள  அமைவிடம் — இருமருங்கிலும் இந்துசமுத்திரத்தின் கடல் போக்குவரத்து ஒழுங்கைகள்–  இந்தோ – பசுபிக்கில் சீனாவின் கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பின் அத்தியாவசியமான பகுதியாகிறது.அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய கிய நாடுகளை உள்ளடக்கிய  பாதுகாப்பு பேச்சுவார்த்தை கட்டமைப்பில் ‘ குவாட் ‘ அமைப்புடன் இந்துசமுத்திர நாடுகள் இணைந்துவிடுவதற்கான சாத்தியம்  குறித்த சீனாவின் விசனமும் அதிகரித்து வருகிறது.சீனாவை நோக்கிய குவாட்டின் இலக்குகள்  இந்தோ பசுபிக்கில் சட்டம் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட சுதந்திரமான –  திறந்த சர்வதேச ஒழுங்கை உறுதிசெய்வதை நோக்கியவையாக இருக்கின்றன.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் குறித்த அரசியல் சர்ச்சையொன்று  கொழும்பில் கிளம்பியிருந்தபோது மேயில் சீனாவின் அரசாங்கசபை  கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வீய் ஃபெங்கீ டாக்காவுக்கும் கொழும்புக்கும் குறுகிய விஜயங்களை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவையும் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்த பிறகு வீய் அமைதியான அபிவிருத்தியும் இருதரப்புக்குமே பயனுடைய சரியான வழியிலான முன்னோக்கிய பாதையிலான ஒத்துழைப்புமே இன்றைய உலகளாவிய போக்கு என்று குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பிட்ட சில பிரதான நாடுகள்  குழுக்களை உருவாக்குவதில்  அக்கறைகாட்டுகின்றன ; மக்களின் பொது அபிலாசைகளுக்கு எதிராக செல்கின்றதும் பிராந்திய நாடுகளின்  நலன்களை  பாதிக்கின்றதுமான பிராந்திய மேலாதிக்கத்தில் நாட்டத்தையும் காட்டுகின்றன என்று குவாட் கட்டமைப்பின் பெயரை குறிப்பிடாமல் அவர் சொன்னார்.

பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீதுடன் நடத்திய பேச்சுக்களின் போதும் இத்தகைய கருத்தை வெளியிட்டஜெனரல்  வீய் பிராந்தியத்துக்கு  வெளியில் உள்ள வல்லாதிக்க சக்திகள் தெற்காசியாவில் இராணுவக் கூட்டணிகளை அமைத்து மேலாதிக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக பங்களாதேஷும் சீனாவும் கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எதிர்வரும் மாதங்களில்  இந்தோ பசுபிக் மூலோபாய சூழ்நிலைகளில்  ஏற்படக்கூடிய  சிக்கல்களுடன் சேர்த்து சீனாவிடமிருந்து பாரதூரமான நெருக்குதல்களை இலங்கை எதிர்நோக்கும் என்பது வெளிப்படையானது.அத்தகைய சூழ்நிலைகளில்,இலங்கையின் பொருளாதாரம் அதன் குவியும் கடன்களை சமாளிக்க போராடும்போது சீனாவின் பணத்தை நாடவேண்டிய நிர்ப்பந்தத்தை தவிர்ப்பது ஜனாதிபதி ராஜபக்சவை பொறுத்தவரை,  மிகவும் கஷ்டமானதாகும்.

 இலங்கையும் இந்தியாவும் அவற்றின் பாதுகாப்பு அக்கறைகளை பொறுத்தவரை பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வைக் கொண்டுள்ளன. இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் அட்மிறல் ஜெயந்த கொலம்பகே 2020 நவம்பரில் வெளியிட்ட அறிக்கையொன்றின் பிரகாரம் பொருளாதார அபிவிருத்திக்காக  ஏனைய நாடுகளுடன் காரியமாற்றுகின்றபோதிலும் கூட, இலங்கையின் மூலோபாய பாதுகாப்புக்கொள்கை “இந்தியா முதலில்” என்ற அணுகுமுறை ஒன்றைக்கொண்டிருக்கும் என்பதை  ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தெளிவுபடுத்திவிட்டார்.

ஆனால், அத்தகைய உணர்வுகள் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை மீறுவதை தடுக்கும் என்றில்லை. கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை எண்ணெய் குதங்கள் போன்ற விவகாரங்கள் இதற்கு உதாரணங்கள். இலங்கையையும் சீனாவையும் சம்பந்தப்படுத்திய முத்தரப்பு உறவுகளைப் பொறுத்தவரை இந்தியா வலுமிக்க மாற்றங்களுக்கு தயாராக வேண்டும்.

கொழும்பு துறைமுக  நகருக்குள் சீனா அதன் பிரசன்னத்தை வலுப்படுத்தும்நிலையில், இலங்கையின் அரசியல் செயற்பாடுகளிலும் அது செல்வாக்கை அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்கமுடியும்.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா இலங்கையில் நடந்துகொண்டதைப் போன்ற  நிலையை ஒத்ததாக , இலங்கையின் கட்சி அரசியலின் தவிர்க்கமுடியாத  அங்கமாக துறைமுக நகரின் செல்வாக்கு வந்துவிடும்.

சீனாவின் பணப்பலத்துடன் இந்தியாவினால் போட்டிபோட முடியாது என்பதும் அபிவிருத்தி போட்டாபோட்டியிலும் கூட பிரிவுபிரிவாகவே வெற்றி பெறக்கூடியதாக இருக்கும் என்பதும் வெளிப்படையான தாகும். ஆனால் , இலங்கையுடனான பொதுவான  கலாசார, வரலாற்று உறவுகளை இந்தியாவினால் பலப்படுத்தமுடியும். இது விடயத்தில், இலங்கையின் அனுகூலத்துக்கு ஏற்றமுறையில் தமிழர்கள் மத்தியில் நீரிணை ஊடான உறவுகளை இந்தியா ராஜீவ் காந்தி யுகத்தின் தலையீட்டு கட்டத்துக்குப் பிறகு பயன்படுத்தவில்லை.

 

 


Tuesday, 15 June 2021

Growing Chinese Shadow in Tamil Nadu’s backyard

 By Col R Hariharan |Times of India, Chennai | June 14, 2021

https://timesofindia.indiatimes.com/city/chennai/growing-chinese-shadow-in-tamil-nadus-backyard/articleshow/83493472.cms




The enactment of the Colombo Port City Commission Act in Sri Lanka last month, has created a lot disquiet and dismay among the people on both sides of the Palk Strait. There has been a lot of hype in the media about increased Chinese threat to South India as a result of China gaining control of the special economic zone coming up in the Colombo Port City (CPC), overlooking Colombo port.

In the next two decades, the CPC is poised to grow into full maturity as an international financial hub like Dubai and Singapore. The only difference is, the state-owned China Harbour Engineering Co (CHEC), a subsidiary of the China Communications Construction Company, holding a 99-year lease on 85   percent of land will be calling the shots.

Apprehension about CPC is real, not merely for South India, but India as a whole. Of course, commercially Colombo port is important because nearly 70 percent of India’s container traffic passes through it. In strategic situations, Chinese presence close to it would make a difference. But, more than that, the CPC legitimises the huge presence of multifaceted Chinese interests -trade and commerce, logistics, communication and finance and infrastructure.

This gives China a big advantage in challenging India’s domination of the Indian Ocean Region (IOR). It will also enhance China’s ability to use its unmatched money power, to progress its influence in India’s neighbourhood in the name of development aid.

Many Sri Lankan leaders are equally worried about the increasing Chinese influence in Sri Lanka.  The Archbishop of Colombo, Cardinal Malcom Ranjith obviously referring to the CPC Commission enactment expressing his concern said, “development is not selling the country’s resources…. the politicians are responsible for protecting the country. Please do not offer our land to different countries.” Former President Ms Chandrika Kumaratunga had warned that Sri Lanka “has all but become a colony of China.”

The SEZ will confer not only commercial and financial benefits to China. But it will augment its intelligence and counterintelligence operations to eaves drop and interfere with Indian communication, track warship movements, enhance cyber threat and satellite tracking. And more than all this, the SEZ can be a useful take off point for infiltrating agents acting against Indian interests. In the past, Pakistan had used its high commission in Colombo to infiltrate Pak agents and terrorists to South India. The Southern states in particular will have to tighten their coastal and airport security to prevent such efforts.

Sri Lanka unique geographic location, midway astride the sea lanes of Indian Ocean, makes it an essential part of China’s maritime security architecture in the Indo-Pacific. China’s concern about Indian Ocean countries joining Quadrilateral Security Dialogue (Quad) framework of the US, India, Japan and Australia has been increasing. The China-centric Quad aims at ensuring a free and open international order based on the rule of law in the Indo-Pacific.

China’s State Councillor and defence minister General Wei Fenghe briefly visited Dhaka and Colombo towards end May, when a political controversy was raging in Sri Lanka over the draft CPC Commission bill. After meeting with President Gotabaya Rajapaksa and Prime Minister Mahinda Rajapaksa, Gen Wei remarked peaceful development and win-win cooperation is the global trend and ‘right way’ forward. Without mentioning the Quad framework, he said certain major countries were keen to form cliques and factions and seek regional hegemony, which goes against peoples shared aspiration and severely harms the interests of regional countries. He had made a similar reference during his meeting with Bangladesh President Abdul Hamid, emphasizing that the two sides should make joint efforts against powers outside the region setting up military alliance in South Asia and practising hegemonism.

It is obvious Sri Lanka would come under tremendous pressure from China in the coming months in tandem with the criticalities of Indo-Pacific strategic situation. Under such circumstances, it is going to be extremely difficult for President Rajapaksa to resist the lure of the yuan, when Sri Lankan economy is struggling to manage its mounting debts.

India and Sri Lanka have good understanding of each other’s security concerns. According to Sri Lanka foreign Secretary Admiral Jayanath Colombage’s statement in November 2020, President Gotabaya Rajapaksa has made it clear that Sri Lanka’s strategic security policy will have an “India first” approach, though Colombo was dealing with other countries for economic development. But such sentiments did not prevent Colombo going back on its commitments to India, whether it is on jointly developing the Eastern Container Terminal (ECT) or other projects hanging fire like strategic development of Trincomalee port.  

India should be prepared for dynamic changes in the trilateral relations involving Sri Lanka and China. As China firm up its presence within the CPC, we can expect it to increase its influence with the body politics of Sri Lanka. It is poised to become an indispensable part of the part of the party politics, similar to a position India had occupied some years back.

Obviously, India cannot compete with China’s money power and its development forays in Sri Lanka have only succeeded in patches. But it can use its strength in shared history and culture with Sri Lanka.  In this regard, India has not used the potential of cross strait relations among Tamils to Sri Lanka’s advantage, ever since the muscular intervention during PM Rajiv Gandhi era.  

(The writer is a former MI specialist on South Asia. He served as the Head of Intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka (1987-90).)








Exclusive: China underestimated India’s strong response that triggered Galwan clash, says ex-MI Col R Hariharan

By Shubham Ghosh | June 12, 2021 | Eastern Eye | https://www.easterneye.biz/exclusive-china-underestimated-indias-strong-response-that-triggered-galwan-clash-says-ex-mi-col-r-hariharan/

 

THEY both are promising economies and with mammoth populations on either side of the border, these two neighbours can aspire to be world beaters in decades to come. But in reality, India and China have been more at odds than in unity. From border to political to geostrategic, the two nuclear-powered neighbours have found themselves embroiled in far too many disputes. The two countries had fought a war in 1962 which ended in favour of the Chinese while in the more recent past, they have come face to face over potential conflicts in Doklam and Ladakh. India Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping have met time and again to defuse the tension but the impact has been found to be short-lived. Is there a realistic solution to India-China tussles and can the two countries focus on bringing a positive change to the world together?

 

Eastern Eye took the opportunity to speak to Colonel Ramani Hariharan, a retired Indian Military Intelligence officer who served in the army for nearly three decades. As a military intelligence specialist, Col Hariharan has worked in times of the India-Pakistan War in Kutch in 1965, the Bangladesh Liberation Struggle (1971) and counter-insurgency operations in several states in north-east India. He was also the Head of Intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka (1987-90) for which he was awarded the Vishist Seva Medal. After his retirement, Col Hariharan has been writing on strategic security issues in national and international print and electronic media. He has also been a visiting faculty in analysis and communication in the Indian Institute of Management (IIM), Indore, and IIM, Raipur. He is currently also associated with the Chennai Centre for China Studies, India, as a strategic security and intelligence analyst.

Here is what Col Hariharan told Eastern Eye on various aspects of India-China relations and what is in store.

EE: The UK Telegraph recently reported that both India and China are mobilising forces at their border once again in the fear of a new conflict. Could there be a possibility of the two neighbours renewing their border rivalry in the middle of a pandemic?

Col Hariharan: Both India and China have already mobilised the forces along the Line of Actual Control (LAC) in eastern Ladakh after the Galwan incident in June 2020. As agreed in the 11th round of talks between the two sides, Indian troops were pulled back from Kailash Range and Chinese troops from Finger 5 to 8 of ridges overlooking the South and North banks of Pangong Tso Lake, respectively. However, Chinese have not pulled back troops dominating the Depsang Plains. Therefore, the de-escalation that had taken place has left the border situation in a half-way house. As the troops on both sides are fully mobilised and disengagement has not been completed, the possibility of another flare-up exists theoretically.

Both sides are probably prepared to handle the possibility of a fresh flare-up but their operational readiness precludes chances of a surprise clash of the Galwan type. The Chinese are said to rotate troops for high altitude acclimatisation and are qualitatively improving their armament. This would indicate they are preparing for a long haul. As summer sets in, patrolling by both sides will increase. Both sides will have be extra cautious lest any precipitate step could lead to a confrontation. Of course, as Indian Army chief General manoj Mukund Naravane has indicated, India is well prepared for such an eventuality.

The Chinese do not seem to be in any hurry to go through with the disengagement of troops, that was agreed upon, So, hopefully we can expect the present phase of ‘armed peace’ to continue.

EE: China’s India policy has been baffling for many. While some of its hawkish media outlets and academics blame India for making things worse at the border, politico-diplomatically, Chinese representatives tend to speak more softly on India, stressing the two neighbours’ friendly relations. Is there a definite thinking behind this pattern?

Col Hariharan: For too long, India had been bending over backwards to accommodate even whimsical actions of China, like insisting on a stapled visa for people of Jammu & Kashmir. Trespassing the LAC in Ladakh had become a habit for Chinese border troops, particularly on the eve of Chinese dignitaries’ visits to India, i.e., Prime Minister Li Keqiang in May 2013 and President Xi Jinping in September 2014. When China was facing the Covid virus threat, Chinese troops occupying Indian territory across LAC served as a useful political diversion for President Xi. Lt Gen Palepu Shankar supports this theory with the observation that the intruding troops came in non-operational formation.

It was evident that the Chinese had underestimated India’s strong response that triggered the Galwan Valley incident in May 2020 and fast mobilisation of troops. When they dilly-dallied in high-level talks to ease the situation, Indian troops surprised the Chinese by carrying out a silent operation to occupy the Finger ridge in North and the Kailash Range in the South of Pangong Tso. This was probably China’s moment of truth to realise the futility of such an adventure.

The Galwan incident was also, probably, PM Modi’s moment of truth as it showed that President Xi was ready to further Sino-Indian rivalry only on his own terms. This left India with few options but to join the ‘Quad’ grouping (of the US, India, Japan and Australia) coming up to coordinate the response to China’s rapidly increasing strategic challenge in the Indo-Pacific region.

Despite the souring of India-China relations and PM Modi launching the ‘Atmanirbhar’ (self-sufficiency) schemes, to wean away dependence on Chinese imports, China has emerged as India’s No 1 trading partner worth $77 billion in 2020-21. This must have reminded China that India continues to remain one of the largest market places for its goods, even when the world was reeling under Covid pandemic. So probably, the Chinese diplomats have been advised to soft pedal their rhetoric against India.

EE: Indian leaderships in the past made efforts to better relations with China despite a perennially mutual suspicion. Rajiv Gandhi tried in the 1980s and AB Vajpayee in the 2000s. Has PM Narendra Modi considered a similar strategy in dealing with China in the last seven years? He has been found making friendly gestures at Beijing time and again but have they been more flashes in the pan than a concrete policy?

Col Hariharan: As the saying goes, it takes two to tango. It is true that India had been trying to build bridges with China, since the 1980s. But the border issue and continued illegal occupation of Indian territory continue to be the elephant in the room in fully actualising the India-China relationship.

However, China seems to be in no hurry to resolve the border issue. Twenty-two rounds of talks have been held on the border issue. This shows that mending relations with India is not a priority for China. Even the modalities of conduct for border troops to avoid confrontation along the disputed border did not prevent the Galwan clash.

The writing on the wall is clear; China wants India to set aside the border dispute in its process of furthering bilateral relations. For India resolving the territorial dispute relates is germane to a win-win relationship with China. So, India can only make the best out of a bad situation, in building cordial relations with China.

EE: Nepal has sought vaccine aid from China after India faced a devastating Covid outbreak this year. Given the talks about ‘Vaccine Maitri’ that India asserted, is this major foreign policy debacle that could only help the Chinese in India’s neighbourhood?

Col Hariharan: I don’t agree that India’s “Vaccine Maitri” initiative has failed. Under this programme, India has exported more than 66 million doses of Covid-19 vaccine to 95 countries worldwide. Of these, 10 million doses were grants from the government, 20 million doses were sent as part of the global COVAX facility and the rest 36 million were commercial exports.

However, the government did not anticipate the second wave and PM Modi during his January 29 speech at the Davos forum prematurely said the country had won the war on Covid-19. This took the shine off the Maitri programme.

However, the programme is not related to only supply of vaccine from India. India has sent medical teams and Covid kits abroad wherever needed. India, along with South Africa, has taken the initiative with WTO for waiver of intellectual property rights to manufacture of Covid vaccines. Overall, India’s ‘Vaccine Maitri’ initiative has been commended by the WHO as well as the UN.

When it comes to Nepal, the Covid vaccination campaign in the country was launched in January 2021 with one million doses of Covishield vaccine gifted by India. Nepal was the first country to benefit from the COVAX initiative in Asia. Under this initiative, Nepal received 380,000 doses of vaccine from India in May 2021.

As against this, China had provided 800,000 doses of Sinopharm BBIBP-CorV vaccine, in March 2021. President Xi Jinping has announced in May 26 that China would provide a million doses of Sinopharm vaccine to Nepal as grant in aid. Unfortunately for China, Sinopharm vaccine has not been very successful. In fact, countries like Brazil and the UAE which had received the vaccine from China, had found it to be ineffective. Even Sri Lanka which received a gift of 300,000 doses of Sinopharm vaccine, deferred its use for months as it had not received the documentation about the vaccine. Overall, I would not rate China’s vaccine diplomacy as a great success.

EE: The Joe Biden administration has brought the focus back on Quad to take on China but India has been less enthusiastic about it. Do you think Quad really has a chance in bringing together an anti-China platform? For India, which is the only Quad nation sharing a border with China, should handling China unilaterally suit more than in a strategic unison?

Col Hariharan: The Quad was formed to ensure a free and open international order based on the rule of law in the Indo-Pacific. It is no doubt China-centric, because Quad members are being challenged in the region by China in many ways. That is why the Quad summit also spoke of other issues like climate change, counter terrorism, critical technologies and disaster relief.

Since India is the only country sharing a long land border with China, its role in the Quad will be unique. As a dominant naval power in Indian Ocean segment of the Indo-Pacific, India has a pivotal role as it has the capability to interdict international sea lanes at choke points.

As External Affairs Minister Dr Jaishankar said in April 2020, the Quad meets India’s aspiration of becoming “a stabilising power”. He called India’s present foreign policy as “India Way” to bring India’s capacities for global good to provide security and connectivity and firmly dealing with global challenges. India would be a “decider or a shaper” than “abstainer” on issues like climate change and connectivity.

Though India had been proud of its strategic autonomy, joining the Quad indicates India’s readiness to adapt it to the strategic needs of the “India Way”. As Dr Jaishankar says, the world is moving towards “multipolarity, rebalancing and plurilateralism. Shared values and comforts are creating new combinations”.

It is inevitable the “India Way” would be tested during the country’s participation as an active member of the Quad. On the other hand, India’s hands are now strengthened by the value addition Quad members bring in. Quad initiative is unlikely to become a military alliance like NATO. But it has enough clout to be a cause for concern for China in managing strategic security in the Indo-Pacific. This is evident from its shrill response to the Quad, and the “warning” it keeps dishing out to other Indian Ocean countries about it.

EE: Finally, what are the prospects of India-China relations’ future under the leaderships of two strongmen – Modi and Xi Jinping? Would they be enemy or friends or frenemies at the best?

Col Hariharan: The two leaders are strong personalities accustomed to force their way through complex situations. Both of them have no hesitation in taking decisions to achieve their goals. It does not matter to either of them whether they are friends or enemies, if they set their mind to achieve their goal. Both of them bring their own political compulsions when they deal with each other.

President Xi is poised to get a further extension of his term as General Secretary of the CCP and President in 2022. According to some reports, like Mao Zedong, he may become a lifetime occupant of the supreme authority. His muscular response to enforce China’s writ in Hongkong, and continuing show of force in South China Sea against Taiwan, Japan and Philippines and even Malaysia has whipped up nationalist fervour in China. This will stand him in good stead when his election comes up in 2022.

However, the Covid pandemic has delayed President Xi’s quest to realise his Chinese Dream, through the Belt and Road Initiative (BRI) infrastructure link between China with the rest of the world. This is affecting Xi’s strategic moves to wrest the leadership role from the US and its allies to create a new world order.

On other hand, the Covid pandemic has put paid to PM Modi’s dream of making India a multi-trillion economy. In 2022, he will have to sell the BJP story afresh to win the Assembly elections in eight states, including Punjab, UP, Gujarat and Himachal Pradesh.
In my reading, under these circumstances, both the leaders would probably avoid getting involved in a messy long-drawn conflict along the LAC, with uncertain results.

Chinese Ambassador to India Sun Weidong’s latest statement in New Delhi that India and China “should respect each other, treat each other as equals, conduct dialogue and consultation and properly address the differences to find a mutually acceptable solution” describes the Chinese attitude best. India also would probably go along with it, as it suits the country limping back from the Covid pandemic.

Also published in:

India Weekly at https://www.indiaweekly.biz/blog/2021/06/12/exclusive-interview-china-underestimated-indias-strong-response-that-triggered-galwan-clash-says-ex-mi-col-r-hariharan/

 

Tuesday, 8 June 2021

Multiple dimensions of India-Sri Lanka relations: An exclusive interview with Col R Hariharan

https://www.trincocss.org/english/multiple-dimensions-india-sri-lanka-relations-exclusive-interview-col-r-hariharan

Interviewed by A Jathindra | Centre for Strategic Studies, Trincomalee, Sri Lanka | June 8, 2021


Col R Hariharan is a retired officer of an intelligent corps in the Indian Army, an expert on South Asia and terrorism. He served as the head of intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka 1987-90. He is associated with the Chennai Centre for China Studies.

You served as the head of intelligence and as the first and last Colonel General Staff (Intelligence) at the Headquarters of the Indian Peace Keeping Force in Sri Lanka. I think you're one witness to what was right and wrong during the Indo-Sri Lanka accord. Almost 34 years have passed since then. There is a comment that the Indo-Sri Lankan accord has been unsuccessful in controlling Sri Lanka. What are your thoughts on this?

Indo-Sri Lanka Accord was not to "control" Sri Lanka, as you call it. The Accord document indicates its objectives were three-fold: 1. To ensure Sri Lanka does not offer any space to powers inimical to India. 2. To reassure Sri Lanka that India stood for a unified Sri Lanka and as a corollary does not support independent Eelam. 3. To ensure Sri Lanka recognises the legitimate rights of minority Tamils recognising their distinct language, culture and traditional areas of habitation and enjoy equal rights on par with the majority community. To ensure this, Sri Lanka introduced the 13th amendment to the Constitution creating provincial council system with a level of autonomy for Tamils of the Northeast.

A section of Eelam Tamils continues to blame India, including Eelam supporters in Tamil Nadu. Their basic argument is that Indian policymakers failed to understand the Sinhala ruling bloc and did not realise that Tamils are loyal friends for the long-term strategic interest of India. What is your comment on this?

A section of the people of Sri Lanka, let alone Eelam Tamils, will always blame India, because it is a big country dominating Sri Lanka in many ways: culturally, religiously, historically, politically, commercially etc. India's relations with Sri Lanka are not nurtured on the ethnic binary of Sinhala vs Tamil. I have not understood your point on Tamils being "loyal" friends of India. On the other hand, it is Tamil Tigers who fought and killed Indian troops and Ex PM Rajiv Gandhi - the man who signed the Accord. Sri Lanka army or Sinhala JVP militants had never fought with India.

A question still arises why India rejected the idea of a separate state for Tamils in Sri Lanka. You know that the entire Tamil political establishments of those days, including the moderate TULF, held the same position and expected India would do the same as it did in Bangladesh. But after the Indo- Sri Lankan accord, they all realised that India would never support it except Prabhakaran. Some observations often emerge in the Tamil political debate about why India refuses it. They argue that if such a state formed for Tamils, it may revive the dream of secession in Tamil Nadu. The other argument is that if such an independent state formed for Tamils, India cannot manage two countries at very close distances. As a veteran of Sri Lankan issues, what is your opinion on these arguments?

TULF leaders had apparently misread India and misled the people. India had always fought against secessionist forces operating in India. In Bangladesh, the people as a whole rose up against Pakistan army dictatorship to create an independent nation. Indian army operation was in support of the peoples struggle for independence. You cannot imagine that India would automatically support creation of independent Eelam carved out of Sri Lanka, just because TULF politically rallies Tamils in support of it.

Any secessionist movement in Tamil Nadu will not enjoy public support because the state, as a part of India, has advanced to become one of the top states of the county. Why should it breakaway and what purpose will it serve?

"India cannot manage two countries at very close distances," is a laughable statement. You seem to have forgotten India is a regional big power dominating Indian Ocean. India IS managing at the same time Pakistan, Nepal, Bangladesh, Bhutan, Burma and China which share a land border with India.

Tamil politicians and intellectuals who are staunch supporters of Tamil nationalism are still investing in Tamil Nadu (TN). Some believe that if a party like Nam Thamilar comes to power in TN, it will help change India's foreign policy favouring Eelam Tamils. Can TN change New Delhi's foreign policy towards Sri Lanka? Can you share your knowledge of Indian foreign policymaking concerning domestic influence?

There are lots of "ifs" in your question. It is not only Naam Thamilar, who are Tamil nationalists. I am also investing in my state as a Tamil nationalist, because I feel Tamils must safeguard their distinct language and culture. Of course, I am not paranoid and suspicious of all others, who speak their language. I am absolutely confident Tamils will prevail, against all odds.

India is a democracy and Indian government will always factor Tamil sensitivities in its Sri Lanka policy, because it is politically wise. Remember, MGR (who supported LTTE) was the biggest supporter of Rajiv Gandhi’s Sri Lanka Accord, because he probably felt it was politically wise to avoid conflict.

In the present environment, India’s Sri Lanka policy would depend upon how Sri Lanka manages China, which is making huge inroads in Sri Lanka. I don't expect any basic change in India's Sri Lanka policy, provided Sri Lanka adheres to President Rajapaksa's promise not to take any action that would jeopardise India's security. I think Rajapaksas are astute and politically savvy to understand India's concerns. Let's hope they continue to maintain it.

Tamil politics in Sri Lanka remains a matter of debate. Most Tamils have realised that the problem will not solve without India's involvement. While asserting that the 13th Amendment is not a political solution for the Tamils, the Tamil National Alliance (TNA) insists that India supports them. Other Tamil nationalist parties also feel that way. How do you see this? How can India help resolve the Tamil issue, and how should the Tamils approach India?

I fear I will not be able to answer this question because I have given up on understanding Eelam Politics. I hope the leaders understand it. India will always support just demands of Tamils. I am not a privy to India's policy formulation, but going by past history, I can think of a few things. Tamil demands should be constructive, expand upon existing scheme of things, not against the unity of the country and enjoy widespread support, preferably across ethnic barriers. If Tamil polity can do it, I can't imagine, India refusing its good offices in support. But the initiative for action should come from the people.

An observation remains that the 'heat of Chinese aggression in South Asia is a serious threat to India's position as a regional power. U. S Secretary of state Mike Pompeo remarked that 'We see from bad deals, violations of sovereignty and lawlessness on land and sea in Sri Lanka'. Can we conclude that India has been facing severe setbacks in the geopolitical contest in the island nation? What is your take on Chinese influence on Sri Lanka?

I will not call it a severe setback because foreign policy and diplomacy are dynamic processes that go up and down. China has made huge inroads into India's strategic areas of influence in South Asia including Sri Lanka. There is no doubt about it. And China will continue to do so.

So far it was China's money power that had enabled it to make rapid strides in the name of aiding development in other countries through the Belt and Road initiative. Now, I expect China to increase its political, diplomatic and military muscle power [to influence other countries]. In a democratic country like Sri Lanka, we are likely to see China as an indispensable political supporter of parties, similar to a position India was sought after. Of course, while China doesn't enjoy the closeness of cultural identity India enjoys, its money power will compensate it.

I expect, as it happened in the US and even India, China will cultivate the media to soften its image as a harsh one-party country. Sri Lanka will become more beholden to China, if international pressure increases, say at the UN instittuions. I expect China to take advantage of this to improve its image. The next logical political development would be showcasing China's achievements through strengthening people to people links. Of course, as PLA navy is becoming more and more powerful, we will see more Chinese warships calling on Sri Lanka ports, increasingly coming under Chinese control. Whether Sri Lanka likes it or not, Chinese cyber capabilities to eavesdrop in the regional communication will; I expect suitable installations for this to come up in Port City.

India, though globally 4th largest economic power, cannot match China in this race. So, I expect India to try build multi-layered linkages with other world powers, who are equally worried about China's ever-increasing clout in Indo-Pacific. Overall, we will be handling Cold War of a different kind. And Sri Lanka is likely to be buffeted more and more in the eye of the storm.

According to the strategic community, Free and Open Indo–Pacific (FOIP) and QUAD are significant moves in the Indian Ocean region. Pompeo' called this a new 'alliance of democracies.' China has recently warned Dhaka against joining Quad and said, 'if Bangladesh did so, it will 'substantially damage' bilateral relations between China and Bangladesh and calling the Quad a 'military alliance aimed against China's resurgence'. I think that Sri Lanka faces a similar situation. As a military strategist, how do you see these developments influence India's neighbours?   

I have been writing on this theme in quite a few articles, particularly in the recent piece 'China gets tough with Bangladesh'. They're in my blog. Please see them. I expect China to tone down its wolf diplomacy as President Xi has asked his people to improve their image. Bangladesh cannot be equated with Sri Lanka in their relations with China, as well as India, because the two strategic environments are different. Quad will not be a military alliance like NATO because national interests of members widely differ in the Indo-Pacific. So, I expect it to be more adaptive, beyond depending only on the use of force. It is too early to see how it will affect Sri Lanka. Let the situation mature.

 Interviewed by A Jathindra | June 8, 2021


Saturday, 5 June 2021

இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன்

 


https://thinakkural.lk/article/123451 

 

சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பலரும் கருதுகிறார்கள். சட்டமூலவரைவு நடைமுறை ரீதியான முரணபாடுகளையும், அரசியலமைப்புக்கு முரணான அம்சங்களையும் கொண்டருப்பதாக இலங்கை உச்சநீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் தெரிவித்திருந்தது. இறுதியில், அரசாங்கம் உச்சநீதிமன்றத்தினால் விதந்தரைக்கப்பட்ட யோசனைகளில் சர்வஜன வாக்கெடுப்பும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும்  தேவைப்படுகின்ற குறிப்பிட்ட சில பிரிவுகளை நழுவிக் கொண்ட போதிலும், ஏனைய சகல திருத்தங்களையும் ஏற்று அவசரமாக பாராளுமன்றத்தினூடாக  சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டது.

 

இந்த சட்டம்  விசேட  பொருளாதார வலயத்தை நிருவகிப்பதற்கும், முதலீட்டாளர்களுக்கு வரி மற்றும் தீர்வைச் சலுகைகளை வழங்குவதற்கும், ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. சுற்றிவழைத்துக் கூறும்போது இங்கு சீனர்களையே அர்த்தப்படுத்துகிறது. இந்த “வெளிநாட்டவர்களின்” அக்கறைகறைகள் ஆணைக்குழுவில் உள்ளடக்கப்படுவது குறித்து கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஜனாதிபதியின் ஆலோசகரான  காமினி மாரப்பனவை துறைமுக நகர ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி நியமித்ததன் மூலம் அந்த எதிர்ப்பு சமாளிக்கப்பட்டது. திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல உட்பட வேறு ஆறு இலங்கையர்களும் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பர்.

 

ஒரு சுயாதீனமான அமைப்பு என்று கூறப்படுகின்ற  பொருளாதார ஆணைக்குழு  பாராளுமன்றம் உட்பட நாட்டின் ஒழுங்கமைப்பு  அதிகார நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் இப்போது இயங்கும். கொழும்பு துறைமுகநகரத்தில் உள்ள கம்பனிகள் இலங்கையின் சட்டங்கள், நீதித்துறையின் கீழ் செயற்பட வேண்டியிருக்கும். அத்துடன், இலங்கையின் ஏனைய பாகங்களில் நடைமுறையில் இருக்கும் நிதியியல் மற்றும் சுங்க ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிச் செயற்படவும் வேண்டும். இவையெல்லாம் ஆணைக்குழு சட்டமுலத்தின் மூல முதல் யோசனைகளின் மேலிருந்த பளபளப்பை இல்லாமல் செய்து விட்டது. கொழும்பு துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படுவது டுபாய் அல்லது சிங்கப்பூரின் வழிகளில் ஒரு சர்வதேச நிதித்துறைமை போன்றதாக இருக்கும்  என்ற கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தின் தற்பெருமையை இல்லாமல் செய்துவிடுகிறது. இந்த சட்டத்தின் முலமாக திணிக்கப்படுகின்ற மட்டுப்பாடுகளுடன்,  முதலீட்டைக் கவருவதும் விசேட பொருளாதார வலயத்தின் கோரிக்கைகளுடனும்  இணங்கிப்போவதும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை கவலைக்குரியதாகவே இருக்கும்.

 

 துறைமுக நகரத்திட்டம் 1400 கோடி அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகக்கொண்ட இத்திட்டத்தை சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபன கொழும்பு துறைமுக நகர பிறைவேற் லிமிட் என்ற கம்பனியினால்(CHECColombo PortCity Pvt Ltd CCPC) நிர்மாணிக்கப்படுகிறது. 269 ஹெக்டேயர் நிலத்தை கடலில் இருந்து மீட்கும் பணிகள் 2019 ஜனவரியில் பூர்த்தியடைந்தன. பொது உட்கட்டமைப்பு  அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அது இந்த வருட இறுதியில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 20 வருடங்களில் வர்த்தகம், நிதியியல், விருந்தோம்பல் துறை, வீட்டு வசதிதுறை, உட்பட மனைவணிக அபிவிருத்தி (Real Estate Development) ஆகியவை நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த காலகட்டத்தில், மொத்தம் 160,000 தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அதற்கு பிறகு திட்டங்கள் முதிர்ச்சி கட்டத்தை அடையும்போது   எல்லாமாக 210,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்கக் கூடியதாக இருக்குமென்று அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

 

துறைமுக நகர திட்டத்தில்  அடுத்த ஐந்து வருட காலத்தில் 1500 கோடி  டொலர்கள் முதலிடுகள் வரும் என்று பாராளுமன்ற விவாதத்தின்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறினார். திட்டத்தின் நிர்மாணக் கட்டத்தின்போது 200,000 தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய பாரிய ஆற்றல் குறித்தும் அவர் சிலாகித்தார். இந்த அறிவிப்புக்கள் எல்லா இடங்களிலும் அதிகரிக்கும் சீன ஆதிக்கம் காரணமாக திட்டத்தின் சுயாதிபத்தியம் தொடர்பாக பலர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி யிருக்கின்ற போதிலும் கூட மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்களை கிளப்பியிருக்கின்றன.

 

கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் நடைமுறைக்கு வருவது சீனாவுக்கு ஒரு வெற்றியாக கருதப்படலாம். ஏனென்றால், அது கொழும்பின் மத்தியில் இன்னொரு கேந்திர முக்கியத்துவ காலடியை பதிக்கிறது. ஜனாதிபதி சி ஜின்பிங்கின் கீழ் சீனாவின் உலகளாவிய புகழைக் கட்டியெழுப்பும் பரந்த பின்னணியில் , அரசுக்குச் சொந்தமான சீன கனரக பொறியியல் கூட்டுத்தாபனம் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் வெற்றியைக் காட்சிப்படுத்த தயாாகியிருக்கிறது.  

 

பிரதமர் ராஜபக்சவினால் மே 17 சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அமைச்சரவைப் பத்திரம் என்று கூறப்படுகின்ற ஆவணத்தை மேற்கோள்காட்டி “கொழும்பு ரெலிகிராவ்” இணைய பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் நிமால் ரட்ணவீர என்ற ஆய்வாளர் ” கொழும்பு கோட்டை மற்றும் அதனோடிணைந்த  கொம்பனித் தெரு பகுதிகளில் விமானப் படையினாலும் இராணுவத்தினாலும்  பயன்படுத்தப் படுகின்ற சொத்துக்களையும்  அரசுக்குச் சொந்தமான  பெருமதிப்புமிக்க பலநூறு ஏக்கர் நிலங்களையும் அடுத்த இரு வருடங்களில் விற்பனை செய்யத் திட்டமிடுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

ராஜபக்சாக்களை கடுமையாக விமர்சனம் செய்கின்றதாக அறியப்பட்ட “கொழும்பு ரெலிகிராவ்  சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு சொத்துக்களில்  விபரங்களை அறிந்திருப்பதாக கூறுகிறது. பெய்ஜிங்கிற்கு சொந்தமான கம்பெனிக்கும் அதனோடிணைந்த முதலீட்டாளர்களுக்கும் இந்த சொத்துக்களை கைமாற்றுவதற்கான பாதையை இலகு வாக்குவதற்கென்று விசேடமாக உருவாக்கப்பட்ட உள்ளூர் இடைத்தரகு கம்பனியூடாகவே சீன கூட்டுத்தாபனத்துக்கு இவை விற்பனை செய்ப்பட விருப்பதாக கூறப்படுகிறது.

 திருப்திகரமாக செயற்படாத பல சொத்துக்களை ஒப்பேறக்கூடிய — இலாபகரமான–சந்தைப்படுத்தக்கூடிய சொத்துக்களாக மாற்றும் பணி அரசுக்குச் சொந்தமான சிலென்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. முதலீட்டு துறைசார் நிறுவனங்களை அவ்வாறு மாற்றும் பணிகளை முன்னெடுப்பதற்கு

நகர அபிவிருத்தி அதிகார சபை அங்கீகாரத்தை கோரியிருக்கிறது ; கொழும்பு கோட்டை மரபுரிமைச் சதுக்கம், அசையாச்சொத்து அபிவிருத்தி மற்றும் அரசுக்குச் சொந்தமான வருந்தோம்பல் துறை ஆகியவற்றை சிலன்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸின் கீழ் கொண்டு வரப்பட விருப்பவையாகும் என்றும் டெலிகிராப் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

 

முன்னைய சிறிசேன — விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த அரசாங்கம் கொழும்பு நகரத்தை ஒரு வரர்த்தக மற்றும் நிதியியல் தலைநகராக மாற்றும் முயற்சியில் இந்த அரசாங்க சொத்துக்கள் பலவற்றை பட்டியலிட்டிருந்ததாக தெரியவந்தது.அக்கறையுடைய  முதலீட்டாளர்களிடையேயான போட்டி ஏலச் செயன்முறையின் கீழ் இந்த திசைதிருப்புதல் ஒழுங்கமைக்கப்பட விருந்ததாக கொழும்பு ரெலிகிராவ் கூறியது.

 

ஆனால், சீனர்கள் செயற்படுகினற வேகத்தை அடிப்படையாகக் கொணடு நோக்குகையில், போட்டி ஏலச்செயன்முறையின்றி அனுமதி வழங்கப்படக்ககூடும். ஏனென்றால் அவ்வாறு அண்மையில் நடைபெற்றது. கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்ட கையோடு நூறுகோடி செலவில் ஏலச்செயன் முறையின்றி 17 கிலோ மீடடர்கள் களனி– அத்துறுகிரிய உயர அதிவேக நெடுஞ்சாலையை 100 கோடி டொலர்கள் ஒப்பந்தததுக்கு சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு  வழங்க அமைச்சரவை தீர்மானித்து. சீனக்கம்பனி முக்கியமான அதிவேக நெடுஞ்சாலையொன்றை 17 வருடங்களுக்கு பிறகு நிர்மாணித்து அதன் உரிமையைக் கொண்டிருக்கும். கைமாற்றும் உரிமையும் அதனிடமே இருக்கும். இது ஜனாதிபதி சி ஜின்பிங்கின் மண்டலமும் பாதை என்ற தொப்பியில் இன்னொரு செண்டாக அமையும்.

 

கொழும்பு துறைமுக நகரில் சீன முதலீட்டாளர்கள்  தங்களுக்கு விருப்பமான சொத்துக்களை தெரிவு செய்வதற்கான சாத்தியம் இருக்கும் என்கிற அதே வேளை, அந்த நகரில் மேற்கத்தைய மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் அக்கறை காட்டுவார்களா? உள்நாட்டு அல்லது சீனாவைச் சேர்ந்த  முதலீட்டாளர்களை தவிர எந்தவொரு சர்வதேச முதலீட்டாளரும் கொழும்பு துறைமுக நகரில் தெரிவைச் செய்வதற்கு முன்னதாக இரண்டு கவலைகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு இருக்கும்.

 

முதலாவதாக, பொருளாதார வலயத்துக்குள்ளும் வெளியிலும் நல்லாட்சியுடன் கூடிய பாதுகாப்பையும்  ஊழலற்ற சுதந்திரமான சூழலையும் வழங்குவதில் அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஆற்றல். 2009 மேயில் ஈழம் போரின் முடிவுக்கு பிறகு சர்வதேச அக்கறைகளை முற்று முழுதாக  அலட்சியம் செய்யும்  மரபை ராஜபக்சாக்களின் கீழான இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது. நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்ற இனத்துவ அமைதி மற்றும் மனித உரிமைகைளை மீள நிலை நிறுத்துகின்ற பிரச்சினைகளும் இதில் அடங்கும். ஒரு சில வழக்குகளில் இலங்கையின் நீதித்துறை அதன் புகழைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. சட்டம், ஒழுங்கு நிலைவரம் மிகவும் கடுமையான அரசியல் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுகிறது. ஊழல் தலைவிரித்தாடுகிறது. கொவிட்  — 19 பெருந்தொற்று நோயின் விளைவாக நாடு முகங் கொடுக்ககின்ற   பாரதூரமான  நிலைவரத்தை நிருவாகம்  கையாளுகின்ற முறையும் மோசமானதாகவே இருக்கிறது.

 

ஒட்டு மொத்தமாக நோக்குகையில், இந்த பிரச்சினைகள் எல்லாம் கொழும்பு துறைமுக நகரை முதலீட்டுக்கு அனுகூலமான வலயம் என்று சிபாரிசு செய்வதற்கு முன்னதாக சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களை ஒன்றுக்கு இரு தடவைகள் சிந்திக்கவைக்கலாம்.

 

ராஜபக்சாக்கள் தங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் பாதுகாப்பு சபையில் இருந்து மாத்திரமல்ல, பொருளாதார நெருக்கடியில் இருந்தும் கூட மீட்டெடுப்பதற்கு சீனாவின் மீது தங்கியிருக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. அதனால் நாட்டுக்கு பாதகமான முறையில் சீனாவுக்கு அனுகூலமான தீர்மானங்களை எடுப்பதன் மூலமாக அவர்கள் விலையைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு, அரசாங்கம் இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்திருந்த முன்னைய ஒத்துழைப்பு உடன்படிக்கையை ராஜபக்சாக்கள் ரத்து செய்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் விசேடமாக குறிப்பிட்ட  காரணம் நாட்டின் சுயாதிபத்தியமாகும்.  ஆனால், சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் பகிரங்கமாகவும்  தீவிரமாகவும் உயர் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற துறைமுக நகரத் திட்டம் என்று வரும்போது அத்தகைய சுயாதிபத்தியத்தை குறிப்பாக காண முடியவில்லை. அதே காரணங்களைக் காட்டி ராஜபக்சாக்கள்  அமெரிக்காவின்  மிலனியம் சலெஞச் கோர்ப்போரேசன் 480 மில்லியன் டொலர்கள் முதலீட்டு திட்டங்களை கைச்சாத்திடுவதற்கு மறுத்தார்கள். அத்தனைக்கும் அந்த திட்டங்களை கைச்சாத்திடும் யோசனையை முன்மொழிந்தது மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகக் கொண்ட முன்னைய நிருவாகமேயாகும். அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையின் விவகாரங்களைக் கையாளும்போது, இலங்கையின் இத்தகைய நடத்தையை மறுப்பதற்கு வாய்ப்பில்லை. அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவுடனான உறவுகளை மறு சீரமைத்துவரும்  நிலையில், அவற்றின் எதிர் விளைவின் வெப்பத்துக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டி வரலாம்.

 

இறுதியாக, ஜனாதிபதி ராஜபக்சவுக்கு சீனா நெருக்குதலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு அக்கறைகள்  தொடர்பில் இந்தியாவுக்கு அளித்த உத்தரவாதங்களை அவரால் எவ்வாறு உறுதியாக காப்பாற்றமுடியும்?  சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எம்.வி. எக்ஸ்பிரெஸ் பேர்ள் சரக்குக் கப்பல் இலங்கையின் மேற்குக் கரையோரமாக இரு வாரங்களாக எரிந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருந்த அதே வேளை இலங்கை, இந்திய  மற்றும் சர்வதேச தீயணைப்பு படையினர் தீயணைத்துக் கொண்டிருந்த காட்சிகள் இன்றைய நிலைவரத்தை எமக்கு நினைவுபடுத்துகின்றன. அந்தக்கப்பல் 25 தொன்கள்  நைத்திரிக் அமிலம் என்ற நச்சு இரசாயனத்தை ஏற்றிக்கொண்டு சென்றதை காலம் கடந்தே அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

 

2021 ஆம் வருடம் சீனாவில் எருது வருடமாகும்.ஜனாதிபதி சி ஜினபிங்(1953) போன்று சீனாவில் பாம்பு வருடத்தில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் நல்லது என்று கருதப்படுகிறது  ;  மாவோ சேதுங்கும் பாம்பு வருடத்தில் பிறந்தவரே. இதுவரையில், இலங்கையில் நிலைவரங்கள் சீன ஜனாதிபதிக்கு அனுகாலமானதாகவே இருந்து வருகிறது. இலங்கையில் அவர் ஒரு வேட்டைக்கூட  தீர்க்காமல் போரில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார்.