Sunday, 28 June 2020

எல்லை மீறும் சீனாவின் இரட்டை வேடம்!


கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர் | 26-06-2020


பா லுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' என்று ஒரு பழமொழி உண்டு. அது லடாக் எல்லையில் இந்திய- - சீன ராணுவங்களுக்கு இடையே தொடரும் இழுபறியில், சீனாவின் நிலைப்பாட்டுக்கு மிகவும் பொருந்தும்.

லடாக் எல்லையில், கல்வான் பகுதியில், மே 15-ல், 20 இந்திய வீரர்களின் உயிரைக் குடித்த, சீன ராணுவத்துடன் நிகழ்ந்த கைகலப்புக்குப் பின், இந்த மாதம் ஜூன் 7ல் தொடர்ந்த உயர்மட்ட ராணுவ பேச்சில், இரு தரப்பும் தங்கள் படைகளை சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து விலக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.இரு தரப்பும் படைக்குவிப்பை விலக்கினரா என்பதை, மற்ற தரப்பு உறுதி செய்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், அதற்கான அறிகுறிகள் எதுவும், இன்று வரை தென்படவில்லை.இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள், 17-ல் தொலைபேசி மூலம் நடத்திய பேச்சில், இருநாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்ற நிலையைக் குறைக்க, வழிமுறைகளைக் கண்டறிய ஒப்புக் கொண்டனர். ஊடகச் செய்திகளின்படி, 22-ல் ராணுவத் தலைவர்கள் உயர்மட்ட பேச்சில், 15-ம் தேதிக்கு முன், சீனப் படைகள் எங்கிருந்தனவோ, அந்த இடத்திற்கே செல்லும்படி, இந்தியா வலியுறுத்தியது.

முக்கியமாக சீனப் படைகள் தற்போது நிலைகொண்டுள்ள, பாங்காங் ட்சோ ஏரியின் வடக்கு கரையில், சர்ச்சைக்குரிய, பிங்கர் 4 முதல், 8 வரையிலான பகுதியை, உடனே காலி செய்யுமாறு, இந்தியா கூறியது.மேலும் கிழக்கு லடாக் எல்லையில், முக்கிய பாதுகாப்பு இலக்குகளான கல்வான், கோக்ரா- ஹாட்ஸ்ப்ரிங், டெப்சாங் மற்றும் சுஷூல் ஆகிய பகுதிகளை அச்சுறுத்தும், சீன ராணுவப் படைக்குவிப்பை விலக்குமாறும், சீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சீன ராணுவத்தின் நடத்தை, அதற்கு நேர் மாறாக உள்ளது. பன்னாட்டு செய்தி நிறுவனம், கடந்த, 22ல் வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படங்கள், கைகலப்பு நிகழ்ந்த கல்வான் பகுதியின் அருகே, சீனத் தளங்களிலும், படைக்குவிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை என்றும், போருக்கான தயார் நிலையில் அவை உள்ளதாகவும் கூறியுள்ளது.

கோக்ரா- ஹாட்ஸ்ப்ரிங், டெப்சாங் பகுதிகளிலும் படைக்குவிப்பில் எந்த மாற்றமும் இல்லை; பங்காங் ட்சோவிலும் அதே நிலைதான்.இதற்கு முக்கிய காரணம், சீன வெளியுறவுத் துறை, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதி சீனாவுக்கே சொந்தம் என்றும், மே 15-ல் நடந்த கைகலப்புக்கு, இந்தியப் படைகள் கல்வான் பகுதியில், எல்லையைக் கடந்து தாக்குதல் நடத்தியது தான் காரணம் என்றும் கூறி வருவதே ஆகும். இந்தியாவில் உள்ள சீன துாதர் சுன் வெய்டாங் அளித்த பேட்டியிலும், அதே நிலைப்பாட்டை மேற்கொண்டார்.

இந்திய அரசுக்கு அவர் அளித்த வேண்டுகோளில், கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா தற்போது உள்ள, திடமான நிலையைக் குலைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால், இந்தியாவுடன் சேர்ந்து தற்போதுள்ள நிலையைத் தக்க வைக்க, சீனா தயார் என்றும் கூறியுள்ளார்.இந்திய வெளியுறவுத் துறை செய்தியாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தற்போதைய இழுபறி நிலைக்கு அடிப்படை காரணமே, மேமாதத்திலிருந்து, சீனத் தரப்பு பெருமளவில் ராணுவத்தையும், ஆயுதங்களையும் எல்லையில் குவித்தது தான்' என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், புதிதாக கல்வான் பள்ளத் தாக்குக்கு சீனா சொந்தம் கொண்டாடுவதும் பதற்ற நிலை தொடரக் காரணம் என்றும் கூறியுள்ளார்.இது, 1993-ல் இந்திய- - சீன நாடுகள் செய்துள்ள ஒப்பந்தங்களுக்கு எதிரான செயல் என்றும், சீனாவின் செயல்களுக்குப் பிறகே, இந்தியா, வேறு வழியில்லாமல் தன் படைகளை அந்தப் பகுதிகளுக்கு அனுப்பியது என்றும் கூறியுள்ளார். தற்போது கல்வான் மற்றும் டெப்சாங் பகுதிகளில், இரு ராணுவங்களும் பெரும் அளவில் தொடர்ந்து தங்கி இருந்தாலும், இரு தரப்பும் மேற்கொண்டுள்ள ராணுவ மற்றும் வெளியுறவுத் துறைத் தொடர்புகள் நீடிப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த, 23ல் இரு நாடுகளின் வெளியுறவுத் துறை பிரதிநிதிகளிடையே, இந்திய - சீன எல்லை விவகார செயல் முறைக் கலந்தாய்வு நடந்தது, முக்கியமான முன்னேற்றம் என்றும் கூறியுள்ளார்.

இரு தரப்பிலும் போருக்கான ஆயத்தங்கள் தொடர்கின்றன. இந்தியத் தரப்பில் சுகாய் -30, மிக் -29 மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள், முன்னிலை விமான தளங்களில் செயல்பட தயார் நிலையில் நிறுத்தப் பட்டிருக்கின்றன. இந்திய - திபெத் எல்லை படைப் பிரிவுகள், ராணுவத்துக்கு உதவியாக இயங்க, அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியப் படைகள், லடாக் மட்டுமல்லாமல் எல்லா சீன எல்லைகளிலும், முன்னிலையில் நிறுத்தப் பட்டுள்ளன.இந்திய விமானப் படை மற்றும் இஸ்ரேலிலிருந்து பெற்ற ஹெரான் ட்ரோன்கள், எல்லையை, தொடர்ந்து வேவு பார்த்து வருகின்றன. சீனத் தரப்பில் ஏற்கனவே, பயிற்சி என்ற பெயரில், ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட படைப்பிரிவுகள், போர் பயிற்சியில் ஈடுபடும் பிரசார வீடியோ காட்சிகள், சீன இணைய தளங்களில் தொடர்ந்து தென்படுகின்றன.
மே 15ல் நிகழ்ந்த இந்திய - சீன கைகலப்பின் விபரங்கள், ஊடக ஆய்வாளர்கள் வாயிலாக முன்னுக்குப் பின் முரணான விளக்கங்கள் இருந்தாலும் வெளிவந்துள்ளன. அதன்படி சீனத் தரப்பு, மே மாதம் நடந்த பேச்சு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டபடி, கல்வான் பிபி 14 என்ற இந்தியப் பகுதியில், தன் படைகளை, மே 14-ல் வாபஸ் வாங்கியது. ஆனால் அதே பகுதியில் அடுத்த நாளே, மீண்டும் படை முகாமை அமைத்தது தான், மோதலுக்கு அடிப்படைக் காரணம் என்று தெரிகிறது. அமெரிக்க செய்தி நிறுவனம் அளித்த விபரப்படி, சீன தரப்பிலும் ஒரு படைப்பிரிவுத் தலைமை அதிகாரி உட்பட பலர், கைகலப்பில் இறந்ததாகத் தெரிகிறது. ஆனால் சீனா இதுவரை, அதிகாரப் பூர்வமாக தன் ராணுவ இழப்புகளைப் பற்றிய செய்தியை வெளியிடவில்லை.

அடுத்த முறை அத்தகைய மோதல் நிகழுமா? மோதல் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆனால், அத்தகைய மோதல் நிகழ்ந்தால், அது போராக மாறும் சூழ்நிலை அதிகமாகியுள்ளது. ஏனெனில், கல்வான் தாக்குதலில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்குப் பின், இந்திய அரசு, எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகள், ஆயுதங்களை உபயோகப்படுத்துவதின் மீதான தடையை நீக்கியுள்ளது. எல்லைப் படைகள், சூழ்நிலைக்கேற்ப தேவையான ஆயுதங்களை உபயோகிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவின் இந்த அறிவிப்பு, சீனாவுக்கு பெரும் எரிச்சல் மூட்டியுள்ளது. இந்தியாவின் இந்த முடிவு, 1996 மற்றும் 2005 கையெழுத்தான இந்திய- - சீன உடன்பாடுகளை மீறும் செயல் என்று, சீன வெளியுறவு அமைச்சரகம் சுட்டிக் காட்டியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான, 'குளோபல் டைம்ஸ் இந்தியா'வில், எல்லை மோதல் நிகழ்ந்த பிறகு, வளர்ந்து வரும் சீன எதிர்ப்பின் அழுத்தத்தால், சீனா, இந்தியாவுடன் அமைதியை விரும்பினாலும், போர் மூளும் சூழல் உருவாவதாக எச்சரித்துள்ளது.

அத்தகைய போருக்கு, சீனப் படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் இந்தியாவுக்கு தக்க பாடம் புகட்டுவர் என்றும் கூறியுள்ளது.சீன ராணுவம், படை மற்றும் ஆயுத பலம் மிக்கது. ஆனால், தற்போது தயார் நிலையில் உள்ள இந்திய ராணுவம், 1962-ல் இருந்த ராணுவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உலகிலேயே உயர் மட்ட மலைப் பகுதிகளில், போர் அனுபவம் அதிகம் பெற்றுள்ளது, இந்திய ராணுவமே. ராணுவத்தில், ஒரு பழமொழி உண்டு... 'கையில் துப்பாக்கி இருந்தால் போதாது; அது யார் கையில் இருக்கிறது என்பது முக்கியம்' என்று!அதன்படி, இந்திய ராணுவம், போர்முனைகளில் புடம் போட்ட ரகம். சீனப் படைகளுக்கு, போர் அனுபவம் குறைவு.

இது சீனர்களுக்குத் தெரிந்தாலும், நமக்குப் புரிய வேண்டும்.நம்மில் பலர், நம்மை நாமே குறைத்து எடை போடுகிறோம். அதனால் தான், நான் போரை வேண்டாவிட்டாலும், போர் நேரிட்டால், தயக்கமில்லாமல் தயார் நிலையில் இருப்பது நல்லது என்று கூறுவேன்!

கர்னல் ஆர்.ஹரிஹரன் haridirect@gmail.com இவர், ராணுவ நுண்ணறிவுத் துறையில், 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். தெற்காசிய நாடுகள் மற்றும் சீனாவின் நிகழ்வுகளை ஆய்பவர்.






Another Border Row


Nepal’s amendment of its Constitution to incorporate a new map with three Indian territories in it seems to be at the behest of China, which has increasingly gained a foothold there

By Col R Hariharan |Special | India Legal | June 27, 2020 |
It is easy to view Nepal’s recent enactment of a bill approving a new map of the country and emblem as an anti-Indian act. It showed a triangular sliver of 372 sq km in Uttarakhand—Limpiyadhura-Kalapani-Lipulekh—as part of Nepal.
Nepal Prime Minister KP Oli’s initiative to push the constitutional amendment bill is mischievous, to say the least. It is uncannily timed when India is combating twin threats: the Covid-19 pandemic and a brewing military confrontation with China after 20 Indian soldiers were killed after Chinese troops intruded across the LAC in eastern Ladakh.
There is a strong suspicion of China’s covert hand behind Oli’s moves. A day after the Nepal government enacted the bill to incorporate the three Indian territories in the new map and emblem, senior members of the ruling Nepal Communist Party (NCP) were attending a four-hour video-conference attended by senior members of the international division of theof the Communist Party of China, CPC Tibet Autonomous Region and NCP’s schools division headed by Deputy PM Ishwar Pokharel.
Some of the senior leaders of the NCP questioned the wisdom of organising the conference with the CCP at a time when ties with India are under strain and in the aftermath of the India-China border clash.
A day earlier, Nepal’s foreign minister, Pradeep Gyawali, participated in a high-level video-conference on “Belt and Road International Cooperation: Combating Covid-19 with Solidarity”, chaired by Chinese Foreign Minister Wang Yi.
Last October, when India published a new map incorporating the division of J&K and Ladakh as Union Territories after a constitutional amendment, Nepal objected to it as it showed the Kalapani area as a part of India. The immediate provocation for Nepal’s move is said to be the inauguration of the newly constructed 80-km Mansarovar Road to Lipulekh in May by Defence Minister Rajnath Singh. Nepal objected to it as part of the road passes through the disputed Kalapani area.
The contested area has been part of India since Independence. It was shown as part of British India after Nepal signed the Treaty of Sugauli on March 4, 1816, after losing the first Anglo-Nepal War. The Treaty forms the basis of delineation and demarcation of Nepal’s western border with India along the Kali river. Article 5 of the treaty says that “the Raja of Nepal renounces for himself, his heirs and successors all claim to or connection with the countries lying to the west of the river Kali and engages never to have any concern with those countries or the inhabitants thereof”. Nepal claims that Limpiyadhura is the point of origin of the Kali river, and Kalapani territory, which has been part of India, belongs to it.
Nepal’s territorial claim has a long history and comes up periodically during elections when Nepal’s communist parties accuse India of illegal occupation. During the 1962 war, the Indo-Tibetan Border Police occupied Kalapani and continue to man the border posts. In 2015, the Nepal parliament objected to an agreement between India and China to trade through Lipulekh Pass, stating that trade through Kalapani violated Nepal’s sovereign rights over its territory.
The two countries formed the Joint Technical Level Nepal-India Boundary Committee in 1981 to demarcate the India-Nepal border. The Committee delineated 98% of the boundary, excluding the disputed territories of Kalapani and Sista and submitted the maps in 2007.  However, both countries have not ratified the maps.
Many Indians are peeved because Nepal’s relations with India are special and unique among all the neighbours, embellished by shared history and culture. The 1950 Indo-Nepal Treaty confers many privileges on the people of both countries—open borders, free travel and trade access, equal employment opportunities for Nepalis, and so on. However, over the years, Nepal has been demanding the revision of the Treaty in keeping with the growth of its aspirations to be treated as an equal in dealing with India. Nepal, like many other smaller neighbours, finds India acting as the “big brother” when it deals with issues impinging upon its own interests.
India wielded considerable influence in Nepal from 1950 to 1962. Nepal’s efforts to cut loose from India’s overwhelming influence started in 1973 when King Birendra proposed his country as a zone of peace, the main theme of his foreign policy. While many countries endorsed this, India, which had China and Pakistan as nuclear neighbours, did not do so. A series of events in the 1970s, including success in the 1971 war against Pakistan and nuclear testing in 1974, increased India’s credibility as a regional power. its unofficial support to the Nepali Congress Party leadership and absorption of Sikkim in 1974 probably increased Nepal’s vulnerability. It also had to struggle to get the 1971 trade and transit treaty amended to incorporate its demands.
But it was in 1988 that India-Nepal relations took a nosedive. This was when Nepal signed an agreement with China to purchase weapons. China also won a contract to construct a road in the western sector to connect to Nepal. When the 1978 treaties on trade and transit rights expired in March 1989, India insisted on negotiating a single treaty on this issue. When Nepal refused, India closed all but two border entry points to it on March 23, 1989. This unofficial blockade exerted huge pressure on Nepal as it was dependent on imports from India, including fuel. This caused immense suffering to its people.
However, after a 13-month blockade, relations with India turned positive with the success of the Movement for the Restoration of Democracy in early 1990. The joint Kathmandu-New Delhi communiqué, signed in June 1990, restored all bilateral ties, including trade and transit routes for Nepal’s imports, while respecting each other’s security concerns. All the border points were reopened and Nepal restored India’s commercial privileges.
Significantly, the communique declared that the two countries would cooperate in industrial development and harnessing the waters of their common rivers for mutual benefit. Nepal’s relation with India had to undergo testing times during the years of Maoist insurgency, with China increasingly playing a role in Nepal. Nepal had to undergo a painful process of constitution-making after the Maoists joined mainstream politics.
Soon after coming to power, Prime Minister Narendra Modi made a two-day visit to Kathmandu in August 2014, the first by an Indian PM in 17 years. Sushma Swaraj, the then foreign minister, co-chaired the meeting of the Indo-Nepal Joint Commission (JC), a preparatory to the PM’s visit. The JC met after a gap of 23 years, indicating India’s benign neglect of Nepal in its foreign policy priorities. The two countries agreed to review and adjust the 1950 Treaty of Peace and Friendship to reflect current realities. It was followed up with the formation of the Eminent Persons Group (EPG) in 2016, comprising of experts from India and Nepal to review all bilateral treaties and agreements, including the 1950 Treaty. The EPG finalised its report and presumably the Kalapani issue also figured in it. But it is not clear what follow-up action was initiated by both countries.
Nothing illustrates the continued fragility of relations like the blockade of roads leading to Nepal after it promulgated its new Constitution on February 20, 2015. Marginalised groups living in the Terai region bordering Bihar state—the Madheshis, Janjatis and Tharus—felt left out in the new Constitution. Madheshis protested by blocking fuel trucks at border points. The blockade, coming in the wake of a severe earthquake in Nepal, internationally did enough damage to India’s credibility. By the time it ended in October 2015, China became an indispensable partner as it supplied much-needed fuel. Coupled with the memories of the 1989 blockade, the Madheshi blockade left bitter feelings among Nepalis and influenced Nepal’s policy in the coming years.
In all these machinations, it is good to remember the people of both countries. Six million Nepalis work in India; around 32,000 Nepalis serve in the Indian armed forces and around 1.26 Indian army veterans live in Nepal; there are 11,000 widows of veterans and 12,000 Assam Rifles personnel. Indo-Nepal trade in 2018-19 was a whopping Rs 5,47,858 crore. With Nepal clocking nearly 7% growth, the prospects of further increase in trade are plenty.
We need to preserve the unique character of India-Nepal relations. A map represents peoples’ identity as a nation, so the Nepal map issue should neither be ignored nor trivialised as “yet another” anti-Indian act. That would be oversimplifying the complex problems of Nepal, a small neighbour sandwiched between two Asian giants, as it tries to survive the problems of realpolitik and preserve its own identity.
Added to this is the problem of Nepal’s nascent democracy trying to evolve a coherent development narrative in the midst of political gerrymandering.  Nepal does not need condescension but consideration from India. Rather than allowing the differences to grow, India should take the initiative to resolve the border issue with Nepal.
The writer is a military intelligence specialist on South Asia, associated with the Chennai Centre for China Studies and the International Law and Strategic Studies Institute



Monday, 22 June 2020

நேபாள எல்லையில் ஏன் இந்தத் தொல்லை?



கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர் | ஞாயிறு 21-06-2020

லடாக்கில் இந்திய - சீன எல்லைப் பகுதியில், மே 15 இரவு நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பின், போர் மூளும் அபாய சூழ்நிலை இன்னமும் முற்றும் விலகவில்லை. பேச்சுவார்த்தை உயர்மட்டத்தில் தொடர்ந்தாலும், இந்தியப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு தனக்கே சொந்தம் என்று சீனா தொடர்ந்து கூறுவதால், பிரச்னை எளிதாக முடிவதாகத் தெரியவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட நாடான நேபாளம், இந்திய - நேபாள உறவில் ஒரு புதிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், 372 சதுர கி.மீ., அளவு கொண்ட லிபுலேக் - காலாபானி - லிம்பியதாரா பகுதியை, நேபாளத்தின் வடமேற்கு கோணத்தின் பகுதியாக காட்டும் வரைபடத்தை, பார்லிமென்ட் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது; அதற்கான சட்டத் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது. இது, நேபாளத்தை ஆளும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதமர், கே.பி.ஷர்மா ஒளி முன்னின்று எடுத்த முயற்சியின் விளைவாகும்.

கரும்புள்ளி

இந்திய - சீன எல்லையில், மோதல் ஏற்பட்டு, போர் அபாயச் சூழ்நிலை நிலவும்போது, இந்தியாவின் மீது அழுத்தங்கள் அதிகரிக்கும். இந்த எல்லைப் பிரச்னையை நேபாள பிரதமர் ஷர்மா ஒளி, சீனாவுக்கு ஆதரவாக எடுத்துள்ளாரா? இந்திய - நேபாள எல்லையை ஒட்டுமொத்தமாக வரையறுக்க இரு நாடுகளும், 1981ல் ஒருங்கிணைந்த ஒரு செயற்குழுவை உருவாக்கின. அந்தக் குழு, 2007ல் காலாபானி மற்றும் சிஸ்தா என்ற இரு எல்லைப் பகுதிகளைத் தவிர, மற்ற எல்லைப் பகுதிகளைக் காட்டும் வரைபடத்தை தயார் செய்துள்ளது. ஆனால், இரு நாடுகளும் அதை ஒப்புக் கொண்டதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னமும் செய்யவில்லை.ஆகவே தான், காலாபானி எல்லைப் பிரச்னை அவ்வப்போது இந்திய - நேபாள உறவை தொடர்ந்து பாதிக்கும் ஒரு கரும்புள்ளி என்று கூறலாம். கடந்த, 200 ஆண்டுகளுக்கு மேலாகவே ஒட்டு மொத்தமாக காலாபானி என்று அழைக்கப்படும் லிபுலேக் - காலாபானி - லிம்பியதாரா பகுதி, இந்திய ஆளுமையின் கீழ் இருந்து வருகிறது.

இந்தியாவில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் ஆரம்ப காலத்தில் நிகழ்ந்த, முதலாம் ஆங்கில - நேபாள போரில், நேபாளம் தோல்வி அடைந்தது.அதைத் தொடர்ந்து, 1816ம் ஆண்டு மார்ச் மாதம் நேபாளம், இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசுடன் கையெழுத்திட்ட சுகாலி ஒப்பந்தத்திற்கு பின், ஒட்டுமொத்தமாக காலாபானி என்று அழைக்கப்படும் பகுதி, இந்தியாவின் ஆளுமையின் கீழ் வந்தது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேபாள எல்லையான காலாபானி நதியின் கிழக்கே உள்ள பகுதிகள் நேபாளத்துக்கு சொந்தமானவை.

நேபாளத்தின் வாதத்தின் அடிப்படையே காலாபானி நதியின் மூலத்தை, ஆங்கிலேயர் காலத்து வரைபடங்களில் லிம்பியதாராவில் காட்டாமல், தவறாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து திபெத்தில் உள்ள கைலாச - மானசரோவர் செல்லும் யாத்திரிகர்கள், பல ஆண்டுகளாக இந்தப் பாதையை உபயோகித்து வந்தனர்.திபெத் எல்லையில் உள்ள லிபுலேக் கணவாயைக் கடந்து தான், மானசரோவர் வழியாக அவர்கள் கைலாசம் செல்வர். இந்த வழியே தான் திபெத்துடன், இந்திய மற்றும் நேபாள வணிகமும் நெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த வணிகத்தை ஊக்குவிக்க, 2015ல் இந்தியாவும், சீனாவும் லிபுலேக் கணவாய் வழியாக நடக்கும் வணிகத்துக்காக ஒப்பந்தம் செய்தபோது, நேபாள பார்லிமென்ட், அது நேபாளத்துக்கு சொந்தமான பகுதி என்று கூறி, அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது; இந்திய எல்லைப் படைகளை அங்கிருந்து விலக்குமாறு கேட்டுக் கொண்டது.

விசேஷமானது

யாத்திரிகர் பயணிக்க வசதியாக, எல்லையோரமாக லிபுலேக் கணவாய்க்கு புதிய பாதையை இந்தியா துவக்கிய, 10 நாட்களுக்குப் பின், அதற்கு நேபாளத்தின் எதிர்ப்பு வலுத்தது. அங்கே நேபாள அரசு நேபாள எல்லைப் போலீஸ் படையை அனுப்பியுள்ளது.அதைத் தொடர்ந்து, நேபாள ஜனாதிபதி பித்யாதேவி பண்டாரி, நேபாள எல்லையில் புதிதாக, 500 எல்லைச் சாவடிகளைத் துவக்குவதாக, அரசின் வருடாந்திரக் கொள்கையில் அறிவித்துள்ளார்.

அவற்றில், 1 டஜன் சாவடிகள் மட்டுமே சீன எல்லையில் ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக வரையுறுத்த பின், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அந்த மாறுதலைக் காட்டும் புதிய வரைபடத்தை, இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த வரைபடத்தில், காலாபானி பகுதி இந்தியாவின் பகுதியாக காட்டியிருப்பதற்கு, நேபாளம் தன் எதிர்ப்பை வெளியுறவு அமைச்சகம் வாயிலாகத் தெரிவித்தது. இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர், புதிய வரைபடத்தில் நேபாள எல்லையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.சரித்திரத்தாலும், கலாசாரத்தாலும், மதத்தாலும் ஒருங்கிணைந்த இந்திய -- நேபாள உறவு விசேஷமானது.

அதற்கேற்றதுபோல், 1950ல் இரு நாடுகளும் கையெழுத்திட்ட உடன்படிக்கை படி, நேபாள மக்களுக்கு இந்தியாவில் பயணிக்கவும், தங்கு தடையின்றி கல்வியகங்களிலும் இந்திய அரசாங்க வேலை உள்ளிட்டவற்றிலும் பங்கு பெற வழிவகுத்தது. ஏறக்குறைய, 60 லட்சம்அதற்கேற்றதுபோல், 1950ல் இரு நாடுகளும் கையெழுத்திட்ட உடன்படிக்கை படி, நேபாள மக்களுக்கு இந்தியாவில் பயணிக்கவும், தங்கு தடையின்றி கல்வியகங்களிலும் இந்திய அரசாங்க வேலை உள்ளிட்டவற்றிலும் பங்கு பெற வழிவகுத்தது. ஏறக்குறைய, 60 லட்சம் நேபாளிகள் இந்தியாவில் பணியாற்றுகின்றனர். அதுபோலவே, ஆறு லட்சம் இந்தியர்கள் நேபாளத்தில் பணியாற்றுகின்றனர். இந்திய ராணுவப் படைகளில், 40 ஆயிரம் நேபாளிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்திய ராணுவத்திலிருந்து விடுப்பு பெற்ற, 80 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் நம் நாடு எதிர்கொண்ட போர்களில் காட்டிய வீரமும், செய்த தியாகங்களும் ஈடு இணையில்லாதது.


இவர்களைத் தவிர, ராணுவத்தில் பணியாற்றிய 11 ஆயிரம் வீரர்களின் விதவைகளும், அசாம் ரைபிள் படையில் பணியாற்றிய, 12 ஆயிரம் வீரர்களும் நேபாளத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இந்தியா ஆண்டு ஒன்றுக்கு, 12 பில்லியன் டாலர் விடுப்புத்தொகை அளிக்கிறது. இது, நேபாளத்தின் வெளிநாட்டு வருமானத்தில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பகுதியாகும். இரு நாடுகளுக்கும் இடையே பலத்த வணிக உறவுகள் உள்ளன. இரு நாட்டு வணிகத்தின் மதிப்பு, 2018 - 19ல், 5 லட்சத்து, 47 ஆயிரத்து, 858 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

நேபாளத்தின் வணிகத்தில் இந்திய முதலீடு, 100ல், 40 பங்காகும். நேபாளத்தின் உதவிக்காக, 2019 - 20 பட்ஜெட்டில், 1,200 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கியுள்ளது. அதைத் தவிர இந்தியா, 1.65 பில்லியன் டாலர், நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக அழிந்த சாலைகளை அமைக்க வளர்ச்சிப் பணிக்கு ஒதுக்கியுள்ளது.அப்படி இருந்தும், ஏன் இந்தியாவை எதிர்த்து காழ்ப்புணர்ச்சி நேபாளத்தில் அதிகரிக்கிறது. இதற்கு அரசியல் மற்றும் கலாசாரப் பின்னணி உள்ளது.

நேபாளத்தில் மன்னராட்சி முடிந்த பின், குடியுரிமைச் சட்டம் வரையறுக்க, எட்டு ஆண்டுகளுக்கு மேலாகின. கடந்த, 2015ல் வரையறுக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அதிருப்தி கொண்ட இந்தியாவை ஒட்டிய தென்பகுதியில் வசிக்கும் தாரு, ஜன்ஜாதி மற்றும் மாதேசி என்ற சிறுபான்மை மக்கள், இந்திய எல்லையிலிருந்து வரும் அத்தியாவசியப் பொருட்களை தடுத்து நிறுத்தினர். இதனால், நேபாளத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட, இந்தியாவின் மீது காழ்ப்புணர்ச்சியும் பெருகியது.அப்போது துவங்கிய இந்திய எதிர்ப்புணர்ச்சியை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார், நேபாள பிரதமர் ஷர்மா ஒளி. அந்தச் சூழ்நிலையை சீனா பயன்படுத்தி, நேபாளத்துடனான தொடர்பை வலுப்படுத்தியது.

சந்தேகம்

ஊடகங்களின்படி, நேபாளத்தில் உள்ள சீன துாதர், நேபாளத்தின் ஆட்சியில் உள்ள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்பூசலில் தலையிட்டு, தீர்வு கண்டு உதவியதாகத் தெரிகிறது.தற்போது பிரதமர் ஷர்மா ஒளியின் சீனாவுக்கு சாதகமான செயல்களுக்கு, பெரும்பான்மை நேபாள மக்கள் ஆதரவு தருவரா என்பது சந்தேகமே. இத்தகைய சூழ்நிலையில் இந்திய மக்கள், நேபாள எதிர்ப்பு கூச்சல்களை எழுப்பாமல், தொடர்ந்து சீனாவின் திரைமறைவுச் சூழ்ச்சிகளை புரிந்து, நோபாளத்தின் நல்லிணக்கத்தை இழக்காமல் செயல்படுவது அவசியம். விரைவில், நேபாள - இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உயர்மட்டத்தில் தொடர்பு கொண்டு, பரிவுடன் பிரச்னைகளைத் தீர்க்க வழிகோலுவர் என்பது நிச்சயம்.

கர்னல் ஆர்.ஹரிஹரன் ராணுவ நுண்ணறிவுத் துறையில், 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். தெற்காசிய நாடுகள் மற்றும் சீனாவின் நிகழ்வுகளை ஆய்பவர். haridirect@gmail.com



Sunday, 14 June 2020

இந்திய-சீன எல்லை இழுபறி முடிந்ததா இல்லையா?


 கர்னல் ஆர் ஹரிஹரன்

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக லடாக்-திபெத் எல்லையில் இந்தியப் படையினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து வந்த போர் மூளும் பதட்ட நிலை, படிப்படியாக வரும் நாட்களில் குறைந்து வரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. 

இரு நாட்டின் ராணுவங்களின் தென் திபெத் - லடாக் பகுதிகளுக்கான ராணுவத் தலைவர்கள் எல்லையில் சுஷூல்-மோடோ என்ற இடத்தில் நேரடியாக சென்ற வாரம் சந்தித்து பல மணி நேரங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து இருநாடுகளின் அந்தப் பகுதி ராணுவத் தளபதிகளின் இடையே ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள்  மே 13-ந் தேதி முடிந்தாலும், பிரச்சினை தீரவில்லை. பேச்சுவார்த்தைகள் இன்னமும் தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஆகவே இதுவரை நடத்திய பேச்சு வார்த்தைகளின் பயனாக இரு நாட்டு ராணுவங்களும் போர் மூளக்கூடிய அபாயத்தைத் தாற்காலிகமாக தவிர்க்க எல்லையில் நான்கு இடங்களில் நேர்-எதிராக நின்ற இரு நாட்டின் படைகளும் எல்லையிலிருந்து 2-3 கி. மீ. பின்னே தள்ளி நிற்கிறார்கள்.  ஆனால் இந்தியவுக்கு சொந்தமான பங்காங் ட்சோ ஏரியின் வடக்குக் கரையில் சீன ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு பாதியிலிருந்து படைகளை பின்னெடுக்க சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த தீராத சிக்கல் இம்முறை தொடர்ந்த உயர் மட்டப் பேச்சு வார்த்தைகளில் தீர்ந்தாலும், சீனா இந்திய எல்லையில் இன்னொரு பிரச்சினையை உண்டாக்காது என்ற நிச்சயம்  கிடையாது. ஏனெனில் சீனாவின் பேச்சுக்கும் செயல் பாட்டுக்கும் பெரும் இடைவெளி எப்போதுமே உண்டு என்று இந்தியாவின் கடந்த கால அனுபவம் சொல்கிறது.  

இந்திய ராணுவம் லடாக் பகுதியில் மட்டும் அல்லாமல் வடகிழக்கு எல்லையில் சிக்கிம் மற்றும் அருணாசல் பகுதிகளில் போருக்கான முன்னிலை அணிகளை அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட இடங்களில் தயார் நிலையில் வைத்துள்ளது. லடாக்கில் மட்டும் 12000 இந்தியப் படைகள் குவிந்துள்ளனர். அதுபோலவே சீனப்படைகளும் தயார் நிலையில் உள்ளனர். இரு நாட்டு விமானப் படைகளும் முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆகவே இரு தரப்பிலும் போர்மூளும் ஆபத்து ஒரளவு கிடப்பில் போடப்பட்டாலும், போர் மூண்டால் அதை உடனடியாக எதிர் கொள்ளும் தயார் நிலையில்  போர்ப்படைகள் உள்ளன என்பதே யதார்த்தம்.  இது எல்லையில் நிலவிய பதட்ட நிலை இதுவரை முழுமையாகத்  தீர்க்கப் படவில்லை என்பதையே காட்டுகிறது.  

இந்திய சீன வெளியுறவு அமைப்புக்களும் எல்லைச் சிக்கலைப் பற்றிய தற்போதைய தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். சீன வெளியுறவத் தொடர்பாளர் "என்னால் கூற முடிந்தது, இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைப்புகள் எல்லைப் பிரச்சினை சம்பந்தமாக தொடர்பை நீடித்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார். அவர் எல்லையில் பதட்ட நிலை தீர்ந்தது என்பதைத் தெளிவாகக் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவைப் பொருத்தவரை, சீனாவின் அடிப்படை எண்ணம் அதிபர் ஷூ ஜிங்பிங் சீனாவின் பொருளாதார மற்றும் படைப்பலச் செல்வாக்கை உலக அளிவில் பரப்ப மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு இந்தியா தடையாய் இருக்க கூடாது  ன்பதே. இதற்காக, தெற்காசியாவிலும் இந்தியப் பெருங்கடலிலும் சீனா எடுத்திருக்கும் முயற்சிகளை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், இந்தியா சார்ந்த இரு சீனக் குறிக்கோள்கள் தெளிவாகின்றன.

ஒன்று – இந்திய - சீன பொருளாதார மற்றும் வியாபார உறவுகளுக்கு குந்தகம் விளைவிக்காமல், இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினைக்கு முடிவு காணாமால், எல்லையில் அவ்வப்போது இழுபறி நிலையை உண்டாக்கி இந்தியப்  படைகளை முடக்கி வைப்பது;  இது இந்தியாவுக்கு எதிரான சீன-பாகிஸ்தான் பாதுகாப்பு வளையத்துக்கு மறைமுகமாக ஆதாயம் தரும்.

இரண்டு – இந்தோ பசிபிக் என்று கூறப்படும் கிழக்கு மற்றும் தெற்காசியப் பகுதிளிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் இந்தியாவின் கலாச்சார, பொருளாதார, மற்றும் பாதுகாப்புத் திறனைக் குறைக்க அதன் அண்டை நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரித்தல்.  

இதற்கு உதாரணங்களாக அண்மையில் நடந்த இரு நிகழ்வுகளைக் கூறலாம். இந்திய-சீன எல்லை இழுபறியும், கொரோனா வைரஸ்  அழுத்தம் அதிகரிக்கும்  சூழ்நிலையில் பாகிஸ்தானில் உள்ள சீன தூதரக ஊடகத் தொடர்பாளர் வாங் ஷியாங் ஃபென் ஒரு ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.  அது இந்திய-சீன எல்லைப் பிரச்சினையின் பின்னணியில் சீனாவின் மற்றொரு முகத்தை காட்டுகிறது. அதில் அவர் இந்தியா “தன்னிச்சையாக” காஷ்மீரின் நிலைப்பாட்டை மாற்ற எடுத்த முடிவும் [இந்தியா சென்ற ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்ததையும் அந்த மாநிலத்துக்கு விசேஷ சலுகை அளித்த அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கியதையும் குறிப்பிட்டு], அதைத் தொடர்ந்து “அப்பகுதியில் நிலவும் பதட்ட நிலை” சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ஆளுமைக்கு சவாலாக உள்ளன என்று கூறியுள்ளார். மேலும் இதனால் சீன-இந்திய உறவும் மற்றும் இந்திய-பாகிஸ்தான் உறவும் பாதிக்கப் பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவதாக, இந்திய-சீன எல்லை இழுபறி உச்ச நிலையில் உள்ள போது இந்தியாவுடன் விசேஷ நேச உறவு கொண்ட நேபாளப் பிரதமர் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்திய-நேபாள எல்லைப் பிரச்சினையைத் தட்டி  எழுப்பியுள்ளார். இப்பிரச்சினையில் நேபாளத்தின் வட மேற்கு முனையில் மகா-காளி நதியின் போக்கே இந்திய, சீன நேபாள முச்சந்தி எல்லையை நிச்சயிக்கிறது. அந்தப் பகுதி வழியாக கைலாஸ்  மானசரோவர் யாத்திரிகர் எளிதாக பயணிக்க இந்தியா சாலை அமைத்துள்ளது நேபாளத்துக்குத் தெரியும். இந்தியா அதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஏற்கனவே கூறியுள்ளது. இருந்த போதிலும் நேபாளப் பிரதமர் ஓளி நேபாளச்சட்ட அமைப்பில் நாட்டின் வரைபடத்தில் இப்பகுதியை இணைக்க சட்டத் திருத்த மசோதாவை நேபாள் பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளார். இதனால் நேபாளப் பிரதமர் இந்தப் பிரச்சினையைத் தற்போது எழுப்பியதன் உள் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. நேபாளத்​​தில் ஆளும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனாவுக்கும் நெருங்கிய உறவு உள்ளது என்று‌ம் அதன் உட்கட்சிப் பூசலில் சீனா தூதர் தலையிட்டு  பேசியதாகவு‌ம் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஏற்கனவே பாதுகாப்பு உள்பட நேபாளம் சீனாவுடனான பன்முக உறவுகளைப் பலப்படுத்தியுள்ள சூழ்நிலையில் வருங்காலத்தில் இந்திய-நேபாள உறவில் இதன் தாக்கம் வெளிப்படலாம்.

இந்த இரு நிகழ்வுகள், இந்திய எல்லைப் பிரச்சினையில் இந்தியாவின் அண்டை நாடுகளையும் ஈடுபடுத்தும் சீனாவின் முயற்சி என்றே தோன்றுகிறது.  சீனாவின் இத்தகைய முயற்சிகளால் இந்தியப் பாதுகாப்பு மட்டுமல்லாமல் வெளியுறவு, பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்னாட்டு வணிகம் ஆகிய துறைகளிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்.  

ஆகவே இந்திய-சீன எல்லை இழுபறி முடிந்ததா என்ற கேள்விக்கு, விடையளிக்க இந்திய எல்லைப் பிரச்சினை தீர்க்க சீனா தயாரா என்ற பதில் கேள்வி கேட்கலாம். அதற்கான சர்வதேச சூழ்நிலை தற்போது இல்லை என்றே தோன்றுகிறது.

இந்திய சீன எல்லைப் பிரச்சினையை தினத்தந்தியில் 1960-ல் தொடங்கி பல தசாப்தங்கள் வெளியிடப்பட்ட கன்னித் தீவு கார்டூன் சீரியலுக்கு ஒப்பிடலாம். கன்னித்தீவின் கதாநாயகி ஒவ்வொரு நாளும் திடீர் அபாயங்களை சந்திப்பாள். அது போல நமது எல்லைப் பிரச்சினையும் அவ்வப்போது சீனா தோற்றுவிக்கும் புதுப்புது அழுத்தங்களை தொடர்ந்து எதிர் கொள்ளும் என்பது என் அனுமானம்.

அதை சமாளிக்க ஒவ்வொரு இந்தியனும் உட்பூசலையும் கட்சி அரசியலையும் மறந்து ஒருங்கிணை வேண்டும். இதை நமது தலைவர்கள் புரிந்து கொள்வார்களா என்பது கேள்விக்குறியே.

கர்னல் ஹரிஹரன் முன்னாள் ராணுவ நுண்ணறிவுத் துறையில் பணியாற்றியவர். தற்போது சென்னை சீன ஆய்வு மையத்தில் பங்கேற்பவர்.

Sunday, 7 June 2020

சீனா - எல்லைச் சச்சரவு!


கர்னல் ஆர் ஹரிஹரன் |அந்திமழை | இதழ் 94 | ஜூன் 2020

இந்திய-சீன எல்லைப் பிரச்சினை கடந்த 70 ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. 1962-ல் நடந்த இந்திய-சீன எல்லைப் போருக்குப் பின், இரு நாட்டுத் தலைவர்களும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுத்தும், 22 முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும், இன்று வரை இரு நாடுகளின் ஒப்புதலுடன் எல்லை முழுமையாக வரையறுக்கப் படவில்லை. ஆகவே அவ்வப்போது இருநாடுகளின் எல்லைப் படைகளுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உண்டாவது புதிதல்ல.

எனினும் கடந்த பத்து ஆண்டுகளாக, முக்கியமாக பிரதமர் மோடி பதவிக்கு வந்த பின்னர், இந்திய-சீன உறவை பலப்படத்த பல முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளன. எல்லையில் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகள் மோதலாக மாறுவதைத் தவிர்க்க உடன்பாடுகள் கையெழுத்தாகி செயல்பாட்டில் உள்ளன.

தற்போது, உலக அளவில் கோவிட் வைரஸ் தாக்குதலால் வணிக பொருளாதார, நடைமுறைகள் சீர்குலைந்துள்ளன. இதற்கு சீனாவும் இந்தியாயும் மற்ற தெற்காசிய நாடுகளும் விலக்கல்ல. இந்த இரு ஆசிய வல்லரசுகளும் கோவிட் தாக்குதலால் பெரும் பொருளாதார அழுத்தத்தில் மூழ்கியுள்ளன.

இத்தகைய அசாதாரண சூழ்நிலை நிலவும் போது, மே மாத முதல் வாரத்திலிருந்து லடாக் எல்லையில் ஐந்து இடங்களிலும், சிக்கிம் மாநிலத்தின் வடக்கு எல்லையிலும் இந்திய சீனப்படைகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு பதட்ட நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் என்ன?

வழக்கமாக எல்லையில் உள்ள இருநாட்டுப் படைத்தளபதிகளும் தங்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி பதட்ட நிலையைத் தவிர்ப்பார்கள். அந்த முயற்சி பலிக்காவிட்டால் இருநாட்டு வெளியுறவு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக சூழ்நிலை ஏற்பட வழிவகுப்பார்கள்.  ஆனால் அத்தகைய முயற்சிகள் இதுவரை பலித்ததாகத் தெரியவில்லை.

லடாக் பகுதியில் முக்கியமாக பங்காங்க் சோ என்ற ஏரியை ஒட்டிய எல்லையில் இத்தகைய பதட்டமான சூழ்நிலை ஏற்கனவே இரு முறை ஏற்பட்டதுண்டு. அதற்கு முக்கிய காரணம் சென்ற நான்காண்டுகளாக இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் 61 இடங்களில் கிடப்பில் போடப்பட்ட சாலை அமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகும். அதை சீனா தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. ஆனால் சீனத் தரப்பில் அவ்வாறு எல்லை வரை  சாலைகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் எல்லையில் இந்தியப் படைகளை தேவையான போது  உடனுக்குடன் விமான மூலம் அனுப்ப இந்தியா, அமெரிக்காவிடமிருந்து ராட்சத விமானங்களை வாங்கியுள்ளது. இதனால் இந்திய படைபலம் பன்மடங்கு எல்லையில்  அதிகமாகியுள்ளது. மேலும், சீன-பாகிஸ்தான் பொருளாதார மேம்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் ஆதிக்கத்தில் உள்ள இந்தியாவின் கஷ்மீர் பகுதியில் அமைத்துவரும் பெருவழிச்சாலை மற்றும் ரயில் பாதைகளை இந்தியா முழுமையாக எதிர்க்கிறது.

தற்போதுள்ள பதட்ட நிலையில், இரு நாடுகளும் லடாக் எல்லையில் ஐந்து இடங்களில் ஏறக்குறைய பத்தாயிரம் வீரர்களை போருக்கான தயார் நிலையில் எல்லையின் அருகே குவித்துள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையே போர் நிகழும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

லடாக் பகுதியைப் போல் அல்லாமல் சிக்கிம் பகுதியில் இந்திய சீன (திபெத்) எல்லையில் இருநாடுகளுக்கும் பெருமளவு பிரச்சினை இல்லை. ஆகவே சிக்கிமின் வடக்கு எல்லையில் நகு-லா (தென் கிழக்கு சிக்கிம் எல்லையில் உள்ள நாது-லா அல்ல) கணவாய் பகுதியில் இம்முறை இருபடை வீரர்களுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது வியப்பை அளித்துள்ளது.

கடந்த 2017 ஆண்டு ஜூன் மாதம் சிக்கிம்-சீனா (திபெத்)-பூடான் எல்லையின் முச்சந்தியான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் பூடானின் எதிர்ப்பை மீறி பூடான் எல்லைவரை புதிய சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அதைத் தொடர்ந்து ஏறத்தாழ மூன்று மாதங்கள் இரு நாட்டுப் படைகளும் இழுபறி நிலையில் தொடர்ந்து எதிர்த்து நின்றன.

இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே சுமூகமான சூழ்நிலையை மீண்டும் உண்டாக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஷீ ஜிங் பிங் ஊஹான் நகரில் நேரடியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதுபோன்ற சூழ்நிலை உண்டாவதைத் தவிர்க்க இரு நாடுகளுக்கும் பல்வேறு அளவில் உறவை வலுப்படுத்த முடிவெடுத்தனர்.

அத்தகைய உயர் மட்ட சந்திப்பு சாத்தியமா? இந்தக் கேள்விக்கு விடையளிப்பது எளிதல்ல.

சீனாவின் அடிப்படைக் குறிக்கோள்களில் நாட்டின் பாதுகாப்பும், எல்லைச் சூழ்நிலையின் சீரான நிலையும் முக்கியமானவை. சீனாவின் ஒரே நாடு இரு செயல்முறைகள் என்ற திட்டத்தின் கீழ் ஹாங்காங் மற்றும் தைவான் நாட்டையும் சீனாவின் பகுதி என்று செயல் பட்டு வருகிறது. இதை தைவான் ஓரளவு ஒப்புக் கொண்டது. ஆனால் தைவானில் தற்போதை அதிபர் ட்சாய் தேர்ந்தெடுக்கப் பட்ட பின், தைவானின் முழுமையான சுதந்திரம் பெருமளவில் பேசப்படுகிறது. இதை அமெரிக்கா ஆதரிக்கவே சீன-தைவான் உறவில் பெரும் பதட்டம் நிலவுகிறது. அது போலவே சீன-ஹாங்காங் உறவும் இழுபறியில் உள்ளது.

சீன நாட்டின் நாடாளுமன்றமான தேசிய மக்கள் பேரவை கூட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.  அந்தக் கூட்டத்தில் ஹாங்காங் மக்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்க சீன அரசுக்கு முழு அதிகாரம் அளிக்கும் சட்டம் தீர்மானிக்கப் பட்டுள்ளது. தைவான் கோவிட் தாக்கத்தை எதிர்த்து வெற்றிகரமாக செயல் பட்டதை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக உலக சுகாதார கட்டமைப்புக் கூட்டத்தில் பங்கு பெற முயற்சித்த போது அதை சீனா வலுவாக எதிர்த்தது. அப்போது தைவானுடன் எந்த நாடும் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சீனா மீண்டும் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. 

தென் சீனப் பெருங்கடலில் சீனா அண்டை நாடுகளான மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான், இந்தொனேசியா ஆகியவற்றுடன் தனது கடற்படையை உபயோகித்து அந்தப் பெருங்கடல் தனக்கே சொந்தம் என்று ஆதிக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் இந்திய எல்லையில் சீன படைக்குவிப்பு இந்தியாவுக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கை என்றே தோன்றுகிறது. ஆகவே தற்போதுள்ள லடாக் எல்லைப் பதட்ட நிலை, போராக மாறும் அபாயம் பல மாதங்கள் நீடித்தாலும்  போராக மாறும் என்று தோன்றவில்லை.

ஏனெனில் அமெரிக்காவுடன் நடந்து வந்த  சீன வணிகம் பெருமளவு குறைந்து போன பின்பு, இந்திய வணிகத்திலும் பொருளாதாரத்திலும் பெருமளவில் பங்கு பெற வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு அதிகரித்துள்ளது.

 இரண்டாவதாக இந்திய-பசிபிக் பெருங்கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் “குவாட்” பாதுகாப்பு கட்டமைப்பு உருவாகிவருகிறது. அதில் இந்தியா அறை மனதுடன் பங்கேற்று வருகிறது.

சீனாவின் அழுத்தம் அதிகரித்தால் இந்தியா குவாட் அமைப்பில் முழுமையாக ஈடுபடும் அபாயம் உள்ளது. அது சீனாவின் எல்லைப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம். ஆகவே சீனா இந்தியாவைப் பொறுத்தவரை அதிகம் சாடினாலும் அடக்கியே வாசிக்கும் என்பது என் அனுமானம்.


Wednesday, 3 June 2020

Can President Gotabaya get his act together?


Col R Hariharan |31-5-2020| Sri Lanka Perspectives May 2020 |

South Asia Security Trends, June 2020 | www.security-risks.com

President Gotabaya Rajapaksa completed six months in office on May 18. He came after the Sinhala majority voted him to power after they were disillusioned by the Sirisena-Wickremesinghe government’s failure to deliver on their promises. The last straw was the failure of the government in taking decisive action to stop the Easter Sunday massacre by Jihadi terrorists in spite to getting advance notice.

The first-time president, an army veteran, has lived up to his image as guardian of Sinhala Buddhist heritage and champion of the armed forces. He minced no words in his refusal to take action on accountability for alleged war crimes as promised by Sri Lanka at the UN Human Rights Council.  He did not bother about the political hierarchy of his own party in making appointments, drawing from a pool of civil service and military talent. In his vocabulary, devolution has become a bad word; Sinhala being majority their writ will prevail he declared. It has left Tamil polity stranded as they are encountering a president, who has said a loud NO to their core interest – devolution. Muslims are equally unhappy as the aftermath of Easter Sunday attack has left them cowering from hostile Sinhala backlash in society. Muslim politicians accustomed to cosy up to the majority party in power are spending time to protect themselves from the long arm of law looking into their wheeling and dealing. Memories of earlier Rajapaksa rule are haunting human rights activists as the victims of enforced disappearances due to the war continue languish.

If there is an award for plain speaking politician, he would win it hands down. It is too early to ask the question how much it would benefit him in Sri Lanka politics.

He understood the mood of the nation to lay down his priorities: tightening national security concerns particularly relating to jihadi terrorism, tax cuts and incentives for small and medium enterprises, reducing inflation and beefing up economy and closely orchestrate actions to “curb corruption and prosecuting the corrupt.” He also quickly ordered structural changes to revamp economy and strengthen security apparatus including the intelligence set up and dismantled the corruption investigation set up put in place by the previous government.

The astute President has courted the Chinese, while remaining on the right side of India. It has paid dividends as Indian prime minister Modi reciprocated his gesture advancing a $400 million currency swap facility to bale out Sri Lanka from economic crisis. According to a New Delhi report in the Island, the President on May 23 sought a “special” $1.1 billion currency swap facility to boost Sri Lanka’s foreign exchange reserves under strain after COVID-19 pandemic paralysed the economy. India is likely to meet his request to ‘top up’ the $400 million the currency swap already sanctioned.
However, the COVID-19 pandemic threat has become the biggest challenge the President has encountered in the last six months. It is likely to last during the whole of 2020. As Sri Lanka has a fairly well organised public health system, it has managed the public health emergency better than some of the South Asian neighbours. The number of COVID-19 cases as on May 31 have reached 1620 and 829 patients under treatment while only 10 people have died so far. President Gotabaya has decided to impose a nationwide curfew on May 31 to avoid the unnecessary gathering of people as advised by health authorities. The curfew is likely to continue to till virus spread within quarantine curfew centres is brought under control. But tertiary effect of the Covid virus globally is having a crippling effect on Sri Lanka tourism industry and associated service industries. The other challenge is the loss of remittance income from overseas Sri Lankans which will swell the unemployed figure in the island nation. These are going to test President Gotabaya’s ability to govern under dire circumstances.  
Two months back the President was in a hurry to hold the parliamentary election and dissolved the parliament six months in advance. He wanted to gain two thirds parliamentary majority in the parliament to rid of 19th Amendment to the constitution which curtailed some of the powers of the executive president and increased his accountability to the parliament.

However, it seems the COVID-19 has become the spoiler of his aspirations. Sri Lanka parliamentary election, which was rescheduled to be held on June 20, is not going to be held. The Election Commission (EC) has taken the decision to wait for the Supreme Court ruling on petitions challenging the EC’s decision on holding elections on June 20 when the Corona virus pandemic has crippled daily life. The parliamentary election act stipulates five weeks or 35 days as the minimum period for campaigning. In view of the Covid-19 pandemic, EC Director General Saman Rathnayake has said the commission would need 70 days to finalise preparations for the election. Rathnayake said more election staff would be required for the poll and to maintain social distancing more facilities would be required.

According to reports, the government is not happy with the EC’s inability to conduct the general election on the scheduled day of June 20. As a result  the EC is facing criticism from government supporters. In particular, the EC’s objection to politicising the government payment of Rs 5000 to marginalised and poor families to help them during the lockdown period has drawn a lot of flak from Rajapaksas’ supporters.

The continuing uncertainty about holding the parliamentary election has become a major cause for concern for political parties and civil society alike. As per the Constitution, the election was to be held within three months after President Gotabaya Rajapaksa dissolved the parliament on March 2, i.e. June 2.
According to the constitution the President and the caretaker government can rule the country only for three months without a parliament. The President has refused to consider recalling the dissolved parliament, although almost all opposition political parties had requested him to do so. This has triggered a lot of discussion among leaders of civil society and political parties on the future course of action.
As Jehan Perera, civil society activist says “The direction of Sri Lanka’s democratic process hangs in the balance. As many as seven cases with regard to the general elections and the presidential decree dissolving parliament are pending before the Supreme Court. The outcome of the judicial decision may decide whether Sri Lanka will continue to be governed by the president and caretaker cabinet until the general elections actually take place to bring in a new parliament.”
If that happens the Rajapaksas may not be too unhappy; there is enough precedence the world over in many countries, where the governments have assumed extraordinary powers as part of the fight against COVID-19 pandemic.  That could have unforeseen repercussions as under President Gotabaya’s dispensation more and more government bodies are being placed under Ministry of Defence (MoD) or under army officers.  Article 44 (2) of the constitution enables the President to determine the assignment of subjects and functions to ministers and non-Cabinet appointment holders. In March, he placed the Department of Immigration and Emigration under the MoD. He assigned matters relating to immigration, emigration and Sri Lankan citizenship to the MoD through an Extraordinary Gazette notification.
President Gotabaya has now appointed senior military officers as secretaries to two key ministries. Maj General Sanjeeva Munasinghe, chief of the Army Medical Corps, is entrusted with the running of the Health Ministry, when the country is combating Covid-19 pandemic. Maj General Sumedha Perera(Retd) has been appointed as secretary to the Mahaweli, Agriculture, Irrigation and Rural Development Ministry which is the biggest ministry  with enormous resources.

Six institutions including the Api Wenuwen Api Fund (AWAF) and the National Police Academy (NPA) under the Ministry of Defence. The AWAF was set up jointly by MoD and Central Bank to build 50,000 houses for serving armed forces personnel in 2009; the NPA used to function under the Police Department. The Academy of Financial Studies – the training arm of the Ministry of Finance, the National Authority for the Implementation of Chemical Weapons Convention which was under the Ministry of Industry and Commerce, Sri Lanka Institute of National Defence Studies and the Department of Multi-Purpose Development Task Force are some of the other institutions brought under MoD. The Multi Purpose Development Task Force headed by Maj Gen Nanda Mallawarachchi (Retd.) has been set up with the objective of creating a poverty-free Sri Lanka as stated in the presidential policy statement. 

This would indicate the President has more confidence in officers of the armed forces than civil administrators. While it can produce results in the short term, it is against the civil administrative responsibility of elected governments. Under the circumstances, with no elected parliament in place, can the President get his act together to convince the public of his ability to meet their democratic aspirations with a caretaker government? Only Sri Lankans can answer this question.  

Col R Hariharan, a retired MI officer, served as the head of Intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka from 1987 to 90. He is associated with the Chennai Centre for China Studies and South Asia Analysis Group Email: haridirect@gmail.com Blog:: https://col.hariharan.info