கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர்
| 09-07-2020
பிரதமர் மோடி, லடாக் எல்லைப் பகுதிக்கு மேற்கொண்ட
திடீர் பயணம், இந்தியாவின், சீன உறவில், ஒரு புதிய திருப்பு முனையை காட்டுகிறது. பிரதமர்,
திருக்குறளை மேற்கோள் காட்டி, போருக்கு தயாராக நிற்கும் நம் முன்னணி ராணுவ வீரர்களை
பாராட்டி பேசியது, அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தி இருக்கும். அது, பிரதமரின் லடாக்
எல்லைப் பயணத்துக்கு ஒரு காரணம் என்றாலும், பிரதமரின் நெருப்பு தெறிக்கும் பேச்சு,
சீனாவுக்கு விடுத்த எச்சரிக்கை என்பது, அதை விட முக்கியமானது.
பிரதமர் மோடியின் லடாக் பேச்சில், அவர் சீனாவின் பெயரை எடுக்கா விட்டாலும், அதன் தாக்கத்தை, சீனத் தலைமை உணர்ந்ததை, அதன் பின் நடந்த, இரு தரப்பு பேச்சின் சுமுக முடிவே காட்டுகிறது. சீனப் படைகள் எல்லையிலிருந்து விலக்கப்பட்டாலும், நாம் தயார் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த சம்பவத்துக்கு பின், சீனாவின் வாக்குறுதிகளை நம்பி, அரசு முடிவெடுக்கும் காலம் கடந்து விட்டது.

தற்போது
சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்த்து, இந்திய எதிர்ப்பு வியூகத்தை அமைத்து வருகிறது. அது,
நம் பாதுகாப்பு சூழ்நிலையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தலாம். அவ்வாறு இரு நாடுகளும்,
ஒரே நேரத்தில் இரு முனை தாக்குதல் நடத்தினால், இந்தியாவால் அதை சமாளிப்பது எளிதல்ல.
பாதுகாப்பு உறவு
ஏனெனில், தெற்காசியாவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பலம் வாய்ந்த நாடு
பாகிஸ்தான். மேலும் அது, அணு ஆயுத நாடுகளில் ஒன்று; சீனாவுடன் நெருங்கிய பாதுகாப்பு
உறவு கொண்ட நாடு.பிரதமர் மோடி, லடாக் பயணம் மேற்கொண்ட அதே சமயத்தில், பாகிஸ்தான் வெளியுறவு
அமைச்சர் ஷா முகமது குரேஷி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் தொலைபேசி மூலமாக தொடர்பு
கொண்டு, இந்திய எல்லை சூழ்நிலை பற்றி கலந்துரையாடினார்.
பாக்., ஊடகங்களின்படி, அந்த நேரத்தில் குரேஷி, இந்தியாவின் பகைமை உணர்வு, ஆக்கிரமிப்பை விரிவாக்கும் கொள்கை, தற்போது அந்தப் பகுதியில் நிலவும் சமாதான சூழ்நிலைக்கு அச்சுறுத்தலாக உள்ள அம்சங்கள் பற்றி, கருத்து பரிமாற்றம் செய்து கொண்டார். குரேஷியின் பேச்சில், காஷ்மீரில் இந்தியா தொடர்ந்து நடத்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் எல்லையைக் கடந்து நடத்தும் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது பற்றி குறிப்பிட்டு இருந்தாலும், பாகிஸ்தான் அமைதி காப்பதாக கூறினார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்து
அண்மையில் கிடைத்த ஊடகச்
செய்திகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான்,
20 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளதாக கூறுகின்றன. மேலும், அதே பகுதியில் உள்ள, 'ஸ்கார்டு'
விமான தளத்தை, சீன விமானப்படை உபயோகிப் பதாகவும் கூறுகின்றன. ஸ்கார்டு விமான தளத்தை,
சீன விமானப்படை, இந்தியாவுக்கு எதிரான போரின்போது உபயோகித்தால், திபெத்தில் சீன போர்
விமானங்கள் எதிர் கொள்ளும் பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.
மேலும், இந்தியப் படைகளை, பல முனைகளில் இருந்து போர் விமானங்களால் தாக்க உதவும். இந்த செய்திகளை, 'இந்தியாவின் பொய் பிரசாரம்' என்று பாகிஸ்தான் முற்றிலும் மறுத்தாலும், இந்திய எதிர்ப்பு வியூகத்தால், எத்தகைய போர் முனை விளைவுகளை, இந்தியா எதிர் கொள்ளும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. அவற்றை எதிர் கொள்ளத் தேவையான முயற்சிகளை, இந்திய தளபதிகள் திட்டமிட்டு இருப்பர்.
இரு யூனியன் பிரதேசங்களாக, ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் எதிர்நோக்கும் பல பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப, அந்த விவகாரத்தை உபயோகித்து வருகிறார். சர்வதேச அளவில், ஐ.நா., அமைப்புகளில், காஷ்மீரில் இந்தியா மனித உரிமைகளை மீறுவதாகவும், அடக்குமுறையை அவிழ்த்து விட்டு, அப்பாவி மக்களை கொல்வதாகவும், பாகிஸ்தான் கூறி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், பாகிஸ்தான், இதே காரணம் காட்டி, இந்தியாவை எதிர்த்து ஒரு கண்டன தீர்மானத்தை கொண்டு வர மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது; அந்த முயற்சிக்கு, சீனா உதவியது.
கடந்த ஆண்டு, ஆகஸ்டு மாதம், சீன மிலிட்டரி கமிஷனின் உதவித் தலைவரான ஜெனரல் ஷூ ஜ்யூலியாங், பாகிஸ்தான் விஜயம் செய்த போது, சீனாவுடன் பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தவும், பாகிஸ்தானின் போர்த்திறனை அதிகமாக்கவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்போது அவருடன், பாக்., ராணுவத் தலைவரான ஜெனரல் பாஜ்வா நடத்திய பேச்சுகளில், ஜம்மு, காஷ்மீரின் தற்போதைய சூழ்நிலையும் அடங்கும்.
இந்தியா - சீன உறவுகள், லடாக் எல்லையில் பதற்ற நிலையில் இருக்கும் போது, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்கு சந்தை வளாகத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான, பலுாச் விடுதலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அதில், 11 பேர் இறந்தனர். இந்த தாக்குதலில், இந்தியாவுக்கு பங்குள்ளது என, பிரதமர் இம்ரான் கான், உடனே அலறி விட்டார். ஐ.நா., பாதுகாப்பு சபையில், இந்த தாக்குதலை கண்டித்து, அதற்கு இந்தியாவை, மறைமுகமாக காரணம் காட்டும் தீர்மானத்தை கொண்டு வர பாகிஸ்தான் முயற்சித்தது. அதற்கு சீனா உதவியது.

காரணம் காட்டல்
அது, அமெரிக்க எதிர்ப்பால்
தோற்றாலும், சீனா - -பாகிஸ்தான் உறவு எவ்வளவு நெருக்கம் அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது.
நம் நாட்டின் எல்லையில் உள்ள லடாக்கில் உருவான பதற்ற நிலை தொடரும் போது, காஷ்மீரில்
அமைதியைக் குலைக்க, பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர் மற்றும் அல்- - பதர் பயங்கரவாத அமைப்புகள்
செய்யும் முயற்சிகள் அதிகமாகியுள்ளன. இவற்றில், இந்த ஆண்டின் முதல், ஆறு மாதங்களில்,
123 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதைக் காரணம் காட்டி, 'இந்தியாவின் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாத கேந்திரமான, பாலாகோட் மீது நடத்திய விமானத் தாக்குதல் போல, இன்னொரு தாக்குதலை இந்தியா தொடுக்கலாம்' என, பாக்., ராணுவத் தலைவர் ஜெனரல் பாஜ்வா, தொடர்ந்து கூறி வருகிறார். இது, எல்லையில், பாக்., படைகளை குவிக்க காரணம் காட்டுவதாக தோன்றுகிறது.

இரும்பை விட வலிமையானது
பாகிஸ்தான் - சீனா உறவுகள்,
1950ல் தோன்றினாலும், அவை விரிவடைந்தது, 1962-ல் நடந்த, இந்தியா - -சீனா போருக்குப்
பிறகே. இரு நாடுகளுக்கும் கலாசாரம், மொழி, அரசியல் அமைப்பு, ஆளுமை என எல்லா வகையிலும்
வேற்றுமைகள் இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைப்பது, 'இந்திய எதிர்ப்பு' என்ற பசையே.
கடந்த, 2010 டிசம்பரில், சீன பிரதமர் வென் ஜியா பாவ், பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய
பிறகு, பாகிஸ்தான் பிரதமர், ரியாஸ் கனி நன்றி கூறும் போது, 'சீனா -- பாகிஸ்தான் உறவை,
மலைகளை விட உயர்ந்தது; கடலை விட ஆழ்ந்தது; இரும்பை விட வலிமையானது; தேனை விட இனிப்பானது'
என, வர்ணித்தார்.
சீன பிரதமர் லீ கேகியாங், 'உங்களுக்கு சீனா மீது அன்பிருந்தால்,
பாகிஸ்தான் மீதும் அன்பு உள்ளது என்பது விளங்கும்' என, இரு நாடுகளிடையே நிலவும் நெருங்கிய
உறவை விளக்கியுள்ளார். கடந்த, 1972-ல் தொடங்கிய, சீனா - பாகிஸ்தான் ராணுவ உறவு, நாளடைவில்
வளர்ந்து, பாகிஸ்தானின் படை பலத்தை வளர்த்துள்ளது. இவற்றில் முக்கியமானவை:-
1. அணு ஆயுதம்; பாகிஸ்தான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க, சீனா மறைமுகமாக
உதவி வருகிறது. அதற்கு தேவையான ஏவுகணைப் பாகங்கள், செயலிகள், அணுகுண்டு வடிவமைப்புக்கான
தேவைகள் மற்றும் யுரேனியம் போன்றவற்றை அளித்து உதவியது.
2. 'ஜே.எப்-17' ரக போர் விமானத்தை, பாகிஸ்தானில் வடிவமைத்து, தயாரிக்க பெருமளவில் சீனா உதவியுள்ளது. இதுவே, பாகிஸ்தானின் முன்னணி போர் விமானமாகும். இது, அமெரிக்காவின், 'எப்-16' விமானத்துக்கு ஈடானது என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இந்தியாவிடம் உள்ள, 'சுகாய் -30' விமானத்துக்கு இது ஈடாகாது.
3. பல ராக்கெட்டுகளை ஒரு நேரத்தில் ஏவக்கூடிய, 'ஏ-௧00' போர்க் கலன். இது, போர்முனையில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் இயல்புடையது. இதற்கு இணையாக, இந்தியாவிடம், 'பி.எம்., 30' போர்க்கலன் உள்ளது.
4. 'வி.டி -1ஏ டாங்கி'கள், அல் கலீத் என, பாகிஸ்தானால் அழைக்கப்படுகிறது. இந்த டாங்கியை, சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து உருவாக்கியுள்ளன. இது, இந்தியாவின், 'டி--72' டாங்கியை தாக்கக் கூடியது என்றாலும், இந்தியாவின் முக்கிய பலமான, 'டி--90' டாங்கிக்கு ஈடு கொடுக்க முடியாது.
5. 'எச்.க்யு-16' எனப்படும், தரையிலிருந்து விமானத்தைத் தாக்கும் ஏவுகணையை, சீனாவிடமிருந்து பாகிஸ்தான் பெற்றுள்ளது.

இவ்வாறு, சீனாவும், பாகிஸ்தானும், இந்தியாவுக்கு எதிராக கூட்டணி
சேர்ந்துள்ளன. எனினும், இவை எல்லாம், இந்திய வீரர்களின் மன திடம், தேசபக்தி முன் ஒன்றும் செய்ய இயலாது!
கர்னல் ஆர்.ஹரிஹரன்
haridirect@gmail.com
haridirect@gmail.com
No comments:
Post a Comment