Tuesday, 13 May 2025

இலங்கை அதிபர் திசாநாயக்கவின் தேர்வு - ஒரு புரிதல்

கேணல் ஆர் ஹரிஹரன் | வீரகேசரி | 11 மே 2025

https://www.virakesari.lk/article/214451 

ஜே.வி.பி என்று பொதுவாக அறியப்படும் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமு(மக்கள் விடுதலை முன்னணி) சிங்கள தேசியவாதத்தை முன் வைத்து இரு முறை மார்க்கசீயவாத ஆயுதப்புரட்சி செய்து இலங்கையின்  சரித்திரத்தில் தனக்கென தனி இடத்தை பெற்றது. அதன் பின்னர், 2014ல் இருந்து அநுர குமார திசாநாயக்க (ஏ.கே.டி)  தலைமையில் ஜே.வி.பி ஆயுதப் புரட்சியை கைவிட்டு தனது மார்க்கசிய கொள்கைகளை நடைமுறை அரசியலுக்கு ஏற்ப புதுப்பித்து னநாயக அரசியலில் நுழைந்து. அதற்கு ஏற்ப, ஜேவிபி தலைமையில் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சிறிய இடதுசாரி கட்சிகள் ஆகியவை ஒருங்கிணைந்து 21 அங்கத்தினர் கொண்ட தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசியல் வியூகம் செயல்பட்டு வந்தது.

ஆனால் இலங்கை தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியால் முன்னணி கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை விடுதலை கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. உதாரணமாக, 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட ஏ.கே.டி. மொத்த வாக்குகளில் 3.16 சதவிகதமே பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.   

இத்தகைய அரசியல் சூழலில் அநுர குமார திசாநாயக்க கடந்த ஆண்டு  செப்டம்பர் 21-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் 55.89 சதவிகிதம் வாக்குகள் பெற்று வியக்கத் தக்க வெற்றி கண்டார். இடதுசாரி குறிக்கோளுடன் இயங்கும் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவது இதுவே முதன் முறையாகும்.

இடதுசாரி அரசியல் ஆணை அந்நாட்டில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இது இலங்கையில் மட்டும் அல்லாமல், இந்திய துணைக் கண்ட அரசியலில் ஈடுபாடுள்ள அனைவரும் எதிர் கொள்ளும் ஒரு கேள்வியாகும்.

இலங்கையின் தற்கால அரசியலே அதற்கு விடை அளிப்பது போல, ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தொடர்ந்து, நவம்பர் 14, 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபி தலைமையில் போட்டி இட்ட தேசிய மக்கள் சக்தி கூட்டணி 61.56 சத விகிதம் வாக்குகளை பெற்று, 159 ஆசனங்களை கைப்பற்றியது. அதை தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி முதன் முறையாக அரசை அமைத்துள்ளது. அதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தலில்3.8 சத விகித வாக்குகளே பெற்ற தேசிய மக்கள் சக்தி எவ்வாறு ஏ.கே.டி தலைமையில் இத்தகைய மகத்தான செல்வாக்கை மக்களிடம் பெற்றது? இடதுசாரி அரசு இலங்கையின் தடுமாறும் பொருளாதாரத்தை சீர்தூக்க இயலுமா? ஏ.கே.டி தலைமையில் அரசு தான் பெற்ற செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளுமா?

இத்தகைய கேள்விகளுக்கு விடைகாண இலங்கையின் புலம் பெயர்ந்த (தற்போது கனடாவில் வசிக்கும்) அனுபவம் மிக்க பத்திரிகையாளரான டேவிட் பியூவெல் சபாபதி (டி.பி.எஸ்) ஜெயராஜ்  இலங்கை ஆங்கில நாடேளுகளில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார்.  அவற்றை தமிழில் மொழிபெயர்த்து மூத்த தமிழ் பத்திரிகையாளரும் தினக்குரல் பத்திரிகை பிரதம ஆசிரியருமான வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையின் முன்னணி தமிழ் நாடேளான வீரகேசரியில் பிரசுரித்தார்.

தனபாலசிங்கம் அவற்றில் ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பை “அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்” என்ற தலைப்பில் புத்தகமாக குமரன் புத்தக இல்லம் பிரசுரமாக இந்தியாவிலும் இலங்கையிலும் வெளியிட்டுள்ளார்.

இந்த புத்தகத்தில் உள்ள முதல் கட்டுரை “அநுர திசாநாயக்க இலங்கை வானில் ‘இடதுசாரி நட்சத்திரம்” ஏ.கே.டியின் எளிய குடும்ப பின்னணியையும், ஜே.வி.பியில் அவரது அரசியல் பிரவேசத்தையும் புரிந்து கொள்ள உதவுகிறது. ஆனால், இந்த கட்டுரையின் தலைப்பின் படி அநுரவின் வெற்றியை சீனாவில் மாசேதுங் தோன்றியதற்கு ஈடாக பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த காலங்களில் ‘இந்திய எதிரி’, ‘தமிழர் எதிரி’,‘மார்க்கசீய பயங்கரவாதி’ ஆகிய மகுடங்களை ஏ.கே.டிக்கு எதிரிகள் சூட்டியுள்ளார்கள். ஆனால், கடந்த ஏழு மாதங்களில் சமயோசித அரசியலுக்கு எடுத்துக்காட்டாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி (Executive President) பதவியில் ஏ,கே.டி செயல்பட்டு வருகிறார். இருந்தாலும் ஜெயராஜ் அளித்துள்ள ‘இலங்கையின் மாசேதுங்’ மகுடம் ஏ.கே.டி-க்கு பொருந்துமா என்பதை இலங்கை மக்கள்தான் வருங்கால தேர்வுகளில் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில், இலங்கை அரசியல் சரித்திரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய தலைவர்கள் தற்போது காணாமல் போயிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். இதற்கு கோத்தாபய ராஜபக்ச முக்கிய உதாரணமாக திகழ்கிறார்.

இரண்டாம் கட்டுரை ஜே.வி.பி-யில் அநுரவின் வளர்ச்சியைப் பற்றியது. ஜே.வி.பி 1980-90 காலகட்ட கிளர்ச்சியின் போது ரணசிங்க பிரேமதாசா அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு ஜே.வி.பியின் தலைவர்களை அழித்த போது சோமவன்ச அமரசிங்க தலைமையில் அநுர எவ்வாறு ஜேவிபியை மீண்டும் உயிர்ப்பிக்க செயல்பட்டார் என விளக்குகிறது. இதில் சோமவன்சவின் தலைமையில் ஏ.கே.டி யதார்த்த வாதியாக செயல்பட்டதற்கு உதாரணங்கள் உள்ளன.  

கட்டுரைகள் மூன்றும் நான்கும் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் வளர்ச்சியில் ஏ.கே.டியின் பங்கை விரிவிக்கின்றன. முக்கியமாக 2014-ல் ஜே.வி.பியின் தலைவராக அநுர தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையில் ஜே.வி.பி 2015 எதிர்கொண்ட ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற அநுர எவ்வாறு செயல்பட்டார் என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது. 

ஐந்தாம் கட்டுரை தலைப்புக்கு ஏற்றபடி 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி காணலாம் என்பதை அநுர எவ்வாறு உணர்ந்தார் என விளக்குகிறது. ஜே.வி.பியில் உள்ள அநுர எதிர்ப்பின் பின்னணியையும் ஜே.வி.பி-தேசிய மக்கள் சக்தி உறவுகளில் அந்த காலகட்டத்தில் இருந்த உரசல்களையும் புரிந்து கொள்ள இந்த கட்டுரைகள் உதவும். எவ்வாறு பாசில் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடிப்படை செயல்பாடுகளை தேசிய மக்கள் சக்தி உணர்ந்து கொண்டு அடிப்படை பலத்தை வளர்த்துக் கொண்டது என்பதையும் அறியலாம். ஆறாம் கட்டுரை அறகலய கிளர்ச்சிக்கு பின் விக்கிரம சிங்க இடைக்கால அதிபர் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில் அநுர தலைமையில் ஜேவிபி-தேசிய மக்கள் சக்தி கூட்டணி எப்படி மக்களை தனது பக்கம் திசை திருப்ப செயற்பட்டது என்பதை விளக்குகிறது.

என்னை பொருத்தவரை, இந்த புத்தகத்தில் வடக்கு மாகாணத்தில் அநுரவுக்கு அளித்த தமிழர் ஆதரவை அலசும்  கட்டுரைகளான 7 மற்றும் 9 மிக முக்கியமானவை. அவை தேசிய மக்கள் சக்தி சற்றும் எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்தில் மூன்று ஆசனங்களை கைப்பற்றியதை புரிந்து கொள்ள உதவுகிறது. அதுபோலவே கட்டுரை 8 கிழக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சியின் வெற்றியை விமர்சிக்கிறது.

இந்த புத்தகத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்து தெளிவு பெறுவர் என்று நம்புகிறேன். ஏனெனில் அவர்கள்தான் இலங்கைத் தமிழர்கள் உய்த்து வர உதவுகிறார்கள். இலங்கையிலும் தெற்காசிய உபகண்டத்திலும் அரசியல் மற்றும் சர்வதேச சூழ்நிலைகள் மாறிவருகின்றன. இத்தகைய சூழலில், இலங்கையில் ஏற்பட்டுள் மாற்றங்களை உணர இப்புத்தகம் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. 


Monday, 5 May 2025

பஹல்காம் தாக்குதல் இனி என்ன நடக்கும்?

 


கர்னல் ஆர். ஹரிஹரன்

Published on: 05 May 2025, 11:58 am

https://www.andhimazhai.com/special-section/special-stories/pahalgam-attack-what-will-happen-next

 

பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் வசம் உள்ள பகுதியின் நடைமுறை எல்லை (லைன் ஆஃப் கண்ட்ரோல்) வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 25 ஆண்டுகளில் அத்தகைய 12,037 மோதல்களில் 22,415 பேர் கொல்லப்பட்டதாக தெற்காசிய பயங்கரவாத விவரங்கள் தரும் வலைதளமான https://satp.org கூறுகிறது. கொல்லப்பட்டவர்களில் 4,980 பேர் அப்பாவி மக்கள் இறந்தவர்களில் பெரும்பாலோர் (12,390) தீவிரவாதிகளே,

பஹல்காமின் அருகே கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த தாக்குதலில் பங்கு பெற்ற நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் அங்கே கூடியுள்ள சுற்றுலாப் பயணிகளில் இந்து ஆண்களைத் தேர்வு செய்து சுட்டுத்தள்ளி உள்ளார்கள். அவர்கள் ஆயுதத்தைப் பறிக்க முயன்ற ஒரு முஸ்லீம் இளைஞனையும் வீழ்த்தி உள்ளார்கள். பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா (எல்.இ.டி)யின் கீழ் காஷ்மீரில் இயங்கி வரும் “தி ரெசிஸ்ட்டன்ஸ் ஃபிரன்ட்” என்ற இயக்கத்தை சார்ந்த மூவர் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் கூறுகின்றனர். இவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர். அப்பாவி மக்களைக் குறிவைத்த இந்த தாக்குதல், பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

நடைமுறை எல்லையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள பஹல்காமில் சுற்றுலாவரும் மக்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த பட்டதன் குறிக்கோள் என்ன? இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் என்ன செய்தி சொல்ல விரும்புகிறது?

2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் 370 – வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து வருகின்றன. முக்கியமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தாக்குதல்கள் பாதியாக குறைந்தது மட்டும் அல்லாமல் அவற்றின் தீவிரமும் குறைந்துள்ளது. அதனால் அங்கே சுற்றுலா வர்த்தகம் குறிப்பிடத்தக்க எழுச்சி அடைந்துள்ளது. உதாரணமாக, 2023 ஆம் ஆண்டில், முன்னெப்போதும் காணாத வளர்ச்சியாக 2.11 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பகுதியில் சுற்றுலாவின் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15.13% ஆக வளர்ந்து வருகிறது.

பாகிஸ்தானின் இந்திய கொள்கையின் அடிப்படையே ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஆதிக்கத்திலிந்து மீட்டு எடுப்பதாகும். ஆகவேதான் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களில் பாகிஸ்தான் மூன்று முறை காஷ்மீரை மையப்படுத்தியது. ஆகவே அங்கே முன்னேறிவரும் பொருளாதார வளர்ச்சி தீவிரவாதத்தை நீர்த்துப் போகச்செய்வதால், பாகிஸ்தான் அதைத் தடுக்கவே சுற்றுலா பயணிகளின் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

இரண்டாவதாக, பாகிஸ்தானில் உள்ள பி.எல்.ஏ என்று கூறப்படும் பலூச் விடுதலை ராணுவப் போராளிகள் அண்மையில் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து தமது தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு 380 பயணிகளுடன் பயணித்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை அவர்கள் கடத்தினார்கள். பாகிஸ்தான் ராணுவம் அணுகுவதற்கு கடினமாக இருந்த ஒரு மலைப்பகுதியில் அதை நிறுத்தினார்கள். பலூச் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் அல்லது பணயக்கைதிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று அந்த அமைப்பு 48 மணி நேர இறுதி எச்சரிக்கை விடுத்தது. இந்த தாக்குதல் பாக் ராணுவத்தின் இயலாமையை உலகுக்கு எடுத்து காட்டியது. இந்த கடத்தலில் இந்தியா பலூச் தீவிரவாதிகளுக்கு உதவியதாக பாக் ராணுவம் நம்புகிறது. 

பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி (COAS) ஜெனரல் சையத் அசிம் முனீர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னாலும் பின்னாலும் பேசுகையில் பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படையான இரு நாடுகள் கோட்பாட்டை எழுப்பி உள்ளார். " முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்று அல்ல, இரண்டு தனித்தனி நாடுகள் என்ற அடிப்படை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது இருநாடுகள் கோட்பாடு. மதம், பழக்கவழக்கங்கள், மரபுகள், சிந்தனை மற்றும் அபிலாஷைகள் – உள்பட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்" என்று பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் (PMA) நடந்த பயிற்சி அணிவகுப்பில் உரையாற்றும் போது அவர் கூறினார். இந்த மனப்பான்மையின் பிரதிபலிப்பே இத்தாக்குதலில் தீவிரவாதிகள் இந்துக்களை தனிமைப் படுத்தி கொன்றது என்று கொள்ளலாமா என்ற ஐயம் ஏற்படுகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அவர் பேசுகையில் "நமது முன்னோர்கள் பாகிஸ்தானை உருவாக்க மகத்தான தியாகங்களைச் செய்தனர். அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறியது இந்த பிரச்சினையை எளிதில் முடிக்க பாகிஸ்தான் தயாராக இல்லை எனக் காட்டுகிறது. இந்தியா தொடர்பான முடிவுகளி பாகிஸ்தானில் ராணுவமே எடுக்கும். ஆகவே இந்திய-பாகிஸ்தான் தீவிரவாதப் போர், ராணுவப் போராக மாறும் அபாயம் அதிகமாகி வருகிறது என்றே கொள்ளலாம்.

இந்திய பிரதமர் மோடி இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப் படுவார்கள் என்று கூறியுள்ளார். மற்றும் இந்தியா சர்வதேச நாடுகளுக்கு பாகிஸ்தானில் மையம் கொண்டுள்ள தீவிரவாதத்தை எதிர்த்து தனது நிலைப்பாட்டை விளக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 1960-இல் பாகிஸ்தானுடன் கையொப்பமான சிந்து நதி தண்ணீர் பங்கீடு ஒப்பந்தத்தை தாற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஆகவே தற்போது, இந்தியா போரில் ஈடுபடாமல் மாற்று வழிகளில் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்க விரும்புகிறது என்று கொள்ளலாம். இதனால் பயன் உண்டா என்பது சந்தேகமே; ஏனெனில் 26 நவம்பர் மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவே கூட பாகிஸ்தான் இதுவரை திருப்தியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போர் விளையுமா என்ற வினாவுக்கு விடை காண்பது அவ்வளவு எளிதில்லை.



Sri Lanka: Will AKD be third time successful at the polls?

 



Col R Hariharan

Sri Lanka Perspectives April 2025 | South Asia Security Trends, May 2025 | https://www.security-risks.com

The ruling National People's Power (NPP) government led by President Anura Kumara Dissanayake (AKD)’s performance in the last seven months will be tested a third time when nearly 17.3 million people vote in the local government (LG) elections to be held on May 6, 2025. According to the Sri Lanka Election Commission, they will be electing members to 339 of the 341 local authorities. These include 28 municipal councils, 36 urban councils and 275 pradeshiya sabhas.

In the last LG elections held in February 2018, the Rajapaksha-led Sri Lanka Podujana Peramuna (SLPP) won 40 percent of the votes. It paved the way for SLPP to field Gotabaya Rajapaksa and elect him as President in the elections held in November 2019. These successes enabled SLPP led by Mahinda Rajapaksa to repeat its winning performance in the parliamentary poll held in August 2020. However, the Covid-19 pandemic and Gotabaya’s poor governance led to economic bankruptcy of Sri Lanka. The people rose up as one against  the government to launch Aragalaya public protests in May 2022. It resulted in dethroning the Rajapaksas, including Gotabaya, from power and sending them to seek cover from public wrath. Ranil Wickremesinghe installed as interim president by SLPP, managed to patch up the economic recovery with some deft handling of the West and India’s goodwill and help from the International Monetary Fund (IMF).

However, when the presidential election was held in September 2024, it was the NPP that managed to convert its stewardship of Aragalaya into votes to elect AKD as the 10th President of Sri Lanka. AKD followed Ranil’s copy book economic recovery plan, satisfying the IMF and kept India on the right side, while pleasing the Chinese. He led the JVP-NPP combine to the parliamentary election in November 2024. Probably the first time the President himself was surprised, when the NPP secured an unprecedented majority, winning 159 seats (out of 225 seats) in parliament. Even more remarkable was AKD managed to dent the seemingly impregnable Tamil nationalism’s bastion in Northern Province with the NPP winning three of the six seats. When AKD goes to LG polls, he will be buoyed with the support of 6.8 million voters who voted for NPP in parliamentary election

Can AKD third time lucky, in the LG polls?

AKD has three advantages as he heads for LG elections. In order to encourage political representation for youth, a youth quota of 25 percent has been introduced in the LG elections. It was the young voter who had spearheaded the Aragalaya protests that led to AKD’s election as President and the defeat of mainstream political parties in the parliamentary election to give a majority to the JVP-led NPP combine. In a not-so-subtle reminder of NPP’s Aragalaya legacy, AKD has chosen the Galle Face Green in Colombo taken over by Aragalaya agitators as the venue for NPP’s May Day rally. He has chosen to reaffirm JVP-NPP credentials with the theme “May Day Rally of the People’s Power Building the Country.” Hopefully, this will dispel  the ideological cloud under which AKD came during his last seven months of rule when he had to swallow the bitter pill of IMF doctored economic recovery. If crowds gathering at AKD’s LG campaign are any indication, NPP is likely to repeat its earlier successes in the local body election too.

Hits and misses

One of the major election promises of the NPP government was to reduce the cost of living while enforcing the IMF programme. On the one hand, Value Added Tax (VAT) is one of the primary sources of revenue. Keeping up the revenue stream going without affecting the cost of living is a herculean task. Despite IMF injunctions, the government reduced electricity bills by 20% for households and 30% for businesses and industries. It has reduced service-export taxes from 30 to 15%. Petrol and diesel prices were reduced as electricity and fuel prices play a significant role in the cost of living. As a part of its economic and social security measures the government has increased the allowances for the elderly and disabled people, kidney patients and four-fold increase in case of death benefits for disaster victims. It has also announced an all round increase in the minimum wage in public sector salary by Rs. 15,750 and in the private sector to Rs. 27,000. It has boosted daily wages of estate workers to Rs. 1,700. The enhanced extra cash income for many families is likely to compensate for the impact of VAT to some extent. This can stand in good stead during the LG elections.

According to the President's Media Division, as part of the EU's GSP+ duty concession’s biennial review process, an EU delegation is visiting Sri Lanka from April 28 to May 6. The Head of South Asia Division of EU Charles Whiteley met with President Dissanayake on April 28. During the meeting Whiteley said the EU has a favourable perspective on the current GSP+ review process. He affirmed the EU’s willingness to continue supporting Sri Lanka in achieving further commercial progress. He stated that the GSP+ concessions from the EU are anticipated to encourage Sri Lanka to provide products that meet standardised quality requirements. The EU had voiced strong disapproval over the misuse of Prevention of Terrorism Act (PTA) by successive Sri Lanka governments. Considering this, the Government is said to have decided to move ahead with repealing the PTA.

The President had repeatedly been telling the collapse of Sri Lanka’s economy was the result of a deeply flawed political system, marked by corruption and mismanagement. The President stated that the current administration is working to rebuild the country through stable and transparent governance, though this transformation will require time. While this is a work in progress, AKD has pointed out that unlike previous governments, which relied heavily on support from the South, the current administration was elected with the collective support of Sinhala, Tamil, and Muslim communities from across the country. His reaffirmation of the government’s commitment to delivering on the promises made to all citizens is yet to be fully demonstrated on the ground.

In Sri Lanka’s history the month of May has a special place. It was on a fateful day in May 1991, vengeful Prabhakaran, leader of the LTTE masterminded the killing of Rajiv Gandhi, former Indian prime minister, who authored the India-Sri Lanka Accord in 1987. May Day rally is also is seen as show of strength of political parties in Sri Lanka. Thirty-two years ago, President Ranasinghe Premadasa was assassinated in a bomb attack by the LTTE, while addressing a May Day rally. Three decades of the struggle for Eelam separatism also ended in May 2009 with the death of Prabhakaran.  In May 2025, we can expect no such dramatic events except AKD and NPP, hopeful of reinforcing their success by winning the LG elections.  

Tailpiece - Fallout of India-Pakistan war on Sri Lanka: Sri Lanka, as a long-standing victim of terrorism, faces difficulty in maintaining a neutral stance in the face of Pakistan-inspired terrorist attack on tourists in Pahalgam. As war clouds gather once again in the region, Sri Lanka will be worried about its adverse impact on tourism sector, as India is a primary source of Sri Lankan tourism. Any threat to regional stability could deter tourists from other parts of the world from visiting Sri Lanka. Indo-Pak conflict could also disrupt shipping routes, increase marine insurance fee and freight costs of the island nation. It would adversely impact Colombo ports trans-shipment operations and import and export trade. Sri Lanka is an import dependent economy, particularly for energy, food stuff and pharmaceuticals. So any disruption of supply chain could send prices to shoot up. Any regional instability could discourage Sri Lanka as a destination for foreign direct investment.  

[Col R Hariharan VSM, a retired MI specialist on South Asia and terrorism, served as the head of intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka 1987-90. He is associated with the Chennai Centre for China Studies. Email: haridirect@gmail.com, Website: https://col.hariharan.info]     


Thursday, 3 April 2025

Law and disorder in Sri Lanka

Col R Hariharan

Sri Lanka Perspectives March 2025 | South Asia Security Trends, April 2025 | https://www.security-risks.com

President Anura Kumara Dissanayake (AKD) completed six months in office in March. During the month the first-ever Budget 2025 of the National Peoples Power (NPP) government, was passed in Parliament by a thumping 159 votes in favour with 45 against it. President AKD in his speech said “We have come to know of some things only now. When I become president, I will receive a pension provided to an MP. That means, in addition to the presidential salary, I will also receive the MP’s pension. I gave a letter today saying that I do not want the MP’s pension. We have to start fixing this country,” he added.

While such symbolic gestures is likely to endear him to the masses, to the detriment of a few past presidents, his government has much bigger problems to solve in the coming months. These include taming the economy and overcome shortage in food supplies that continue to plague the people.

President AKD also has the thankless task of keeping the state afloat in the increasingly unpredictable strategic environment in the Indo-Pacific, particularly after Donald Trump became President of the US. In this context, Prime Minister Narendra Modi’s first ever visit to Sri Lanka after President AKD assumed power, scheduled in the first week of April 2025 assumes importance.

However, the Sri Lankan government formally tabled the infamous Batalanda Commission Report in Parliament, provoking once again discussions on the alleged torture chambers and human rights violations that took place during the JVP insurrection in the1988–1990 period. President Chandrika Bandaranaike Kumaratunga established a Commission in 1995 to investigate the illegal detention, torture, assassinations, and disappearances carried out by the law enforcing authorities at the Batalanda Housing Scheme.

Though, the Commission submitted the final report to President Kumaratunga in 1998, its recommendations were never implemented. All these years, the families of victims covered in the Report, continued their agitation demanding action against the perpetrators of state terror.

Lack of follow up action on Commission’s findings was perhaps the norm followed by political parties as the reports of 35 other commissions also seem to have met with the same fate.  

But the game changed with the National Peoples Power (NPP) government in power. Minister Bimal Ratnayake, Leader of the House, presented the Bathalanda report to Parliament. He said the report was being forwarded to the Attorney General for legal action. He criticised the United National Party (UNP) led government of 1977–1994, for what he called state-sponsored crimes, including the maintenance of the Batalanda torture chambers. He blamed the UNP- specifically for its crackdown on dissent and its role in the July 1983 anti-Tamil pogrom as the part of pattern of repression it had followed. The minister also accused President Kumaratunga’s government for failing to take legal action after receiving the report. He assured President Anura Kumara Dissanayake’s government would not delay in follow action. 

The tabling of the Batalanda Commission Report comes after a controversial interview by former president Ranil Wickremesinghe to Al Jazeera, where he faced tough questions on accountability for human rights violations. During the interview, Wickremesinghe was pressed on his record of impunity, his shielding of war criminals, and his failure to address enforced disappearances. He denied that he was complicit in the use of torture, illegal detention, and extrajudicial killings at Batalanda housing complex. Wickremesinghe first denied the existence of the report, before backtracking. He said “There is nothing to be found against me… I am telling you there is no report.” However, it became awkward for Wickremesinghe when the former BBC Sri Lanka correspondent Frances Harrison held up a copy of the report during the interview. She said “It shows the impunity that he is supporting. It’s absolutely shocking.”

As a follow up to the disastrous interview, Wickremesinghe issued a statement on the report. He recalled the turbulent period following the Indo-Lanka Accord, when the Janatha Vimukthi Peramuna (JVP) launched violent attacks across the country. As a minister in President JR Jayawardane’s government, he was responsible for protecting key economic sites in the Biyagama area, including an oil refinery, a diesel power plant and the Mahaweli electricity supply centre. To facilitate security operations, several abandoned houses belonging to the Ceylon Fertilizer Manufacturing Company were allocated for the use of security forces at the request of-Deputy Minister of Defence Ranjan Wijeratne. During this period, several violent incidents occurred, including the assassination of a police officer- and attacks on local political figures. The government focused on restoring national security and rebuilding the economy.

He said President Chandrika Kumaratunga was politically motivated to establish the Batalanda Commission in 1994 to tarnish reputations. Wickremesinghe maintained that he was called before the commission only as a witness, as he was the Leader of the Opposition at the time. The report did not make any direct allegations against him. He rejected any suggestion of wrongdoing and dismissed the report’s credibility. Denying the report was suppressed, Wickremesinghre pointed out that it was presented in Parliament in 2000, but no party, including the JVP, requested a debate on it.

The Commission, chaired by Justice D Jayawickrama with N E Dissanayake as a member, investigated human rights violations in an unofficial Government detention Centre in Batalanda Housing complex.  The 179-page Report provides a detailed account of several individuals and their affiliation to the Police Department. It showed how Douglas Pieris, one of the main suspects of the Batalanda torture camp was promoted to the rank of ASP based on the duties carried out by him during Subversive Insurgency. The terminologies used before the Commission included terms like ‘justifiable homicides’. It also showed how the then Minister of Industries Wickremesinghe instructed the Liquidator the State Fertilizer Manufacturing Corporation to allocate some houses in the Batalanda Housing Scheme to Police Officers. Witness testimonies showed the houses were used as torture chambers and detention centres for unlawfully detaining and interrogating individuals.

 There are other issues as well. Human rights activist Brito Fernando at a press briefing on behalf of victims, appealed to the government to fill 257 vacancies in the Office on Missing Persons (OMP). The OMP is vested with the task of investigating disappeared persons. Currently it had only 27 staffers, he added.

Fernando also referred to the mass grave discovered at the Matale Hospital with 155 skeletons. “We believe that these incidents occurred during 1988-1990. This area came under the purview of Gotabaya Rajapaksa as the military coordinating officer of the Matale District during the second JVP insurrection between 1987 and 1990. The Presidential Commission report indicates that 1041 persons went missing in this area and 700 individuals went missing during his tenure. So, we believe that Gotabaya Rajapaksa is responsible for the disappearances that happened in Matale”.

The AKD government has promised to take strong action on the Batalanda Commission Report with a special committee to recommend further actions. Apart from some of the explosive political issues discussed above the moot point is whether the NPP government would like to remind the voters of JVP’s dark past before going for local government elections in May 2025? Moreover, the government’s interest in investigating allegations of human right violations against Batalanda House perpetrators can trigger renewed international call to probe war crimes committed against Tamil and forcible disappearances during the last phase of Eelam War. It will be interesting to see how AKD is able to fulfil his promise to ensure the perpetrators are brought to book.

Hollywood actor Alfred Newman once said “crime does not pay as well as politics.”  Reports of politician-criminal nexus in Sri Lanka during the month seems to prove Newman’s altruism. Can AKD break this nexus?

[Col R Hariharan VSM, a retired MI specialist on South Asia and terrorism, served as the head of intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka 1987-90. He is associated with the Chennai Centre for China Studies. Email: haridirect@gmail.com, Website: https://col.hariharan.info]

 

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

 கர்னல் ஆர் ஹரிஹரன்

நான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ரய்பூர் நகரில் மையம் கொண்ட ஐ.ஐ.எம் என்று அழைக்கப்படும் இந்திய  மேலாண்மை கல்வி நிறுவனத்தில்  மாணவர்களுக்கு தகவல்களை எப்படி மதிப்பீடு (assessment) செய்வது என்பது பற்றி சில வகுப்புகளை எடுத்து வந்தேன். அதற்காக,  சென்னையில் இருந்து மும்பாய் வழியாக விமானப் பயணம் அடிக்கடி மேற்கொள்ளுவேன். ஒரு முறை அவ்வாறு பயணித்த போது மும்பாய் விமான நிலையத்தில் ஏறத்தாழ ஐந்து மணி நேரம் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. அறை உறக்கத்தில் நான் உட்கார்ந்திருந்த போது, மனக்குதிரை எனது கடந்த காலத்தை நோக்கி பயணித்தது. 

எனது கடந்த காலத்தை நான் எவ்வாறு கழித்தேன் என்று ஆழ்ந்து  சிந்தித்தேன். அதில் சில அதிர்ச்சிகராமான உண்மைகள் தெரிந்த. முதல் ஐந்தாண்டுகள் பெற்றோர், முக்கியமாக அம்மாவின் கட்டளையில் கழித்தேன். ஐந்தில் இருந்து பத்து வரை என்னுடைய உடன் பிறந்தோர் ஆளுமையின் தாக்கம் அதிகமாய் இருந்தது. பத்து முதல் இருபது  வரை நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாக்கம் அதிகமாயிற்று. இருபதில் இருந்து 60 வயது வரை  நான் வேலை பார்த்த காலத்தில் எனக்கு சம்பளம் அளித்த நிறுவனங்கள் கட்டளைக்கு கீழ்படிந்து வேலை செய்வதில் கழிந்தது.

அறுபது ஆண்டுகளில், நான் தூக்கத்தில் கழித்திருந்த 18 ஆண்டுகள் போக, 18 மாதங்கள் மற்றவர்களைக் காண மற்றும் ரயில், விமான நிலையங்களில் காத்திருப்பதில் கழித்திருக்கிறேன் என்று தெரிந்ததும் என் மனம் நொந்தது.. கூட்டிக் கழித்து பார்த்ததில், எனது 60 ஆண்டு வாழ்க்கையில் எனக்காகவே நான் கழித்த காலம் 12 ஆண்டுகளே! அதை பின் நோக்கிய போது, குடும்பம் மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் கழித்த இன்பமான நாட்கள் நினைவுக்கு வந்தன. இந்த கடந்த கால மனப்பயணம் எனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நான் வாழ்க்கையில் தவற விட்ட எனக்கு பிடித்த காரியங்களை மட்டுமே இனி செய்வது என்று முடிவு எடுத்தேன். சென்னை மேலாண்மை கழகத்தில் நான் வகித்த இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தேன். அதன் பிறகு ஆங்கிலத்திலும் தமிழிலும் பாதுகாப்புத்துறை சார்ந்த என் கருத்துக்களை எழுத ஆரம்பித்தேன். தற்போது ஏறக்குறைய எனது ஆயிரம் கட்டுரைகளும் நேர்காணல்களும் பதிவாகி உள்ளன. ஆங்கிலத்தில் 14 புத்தகங்களில் எனது கட்டுரைகள் பதிவு பெற்றுள்ளன.

ஆனால் இந்த கட்டுரை எனது சாகசங்களை பற்றியது அல்ல. அதற்கு மாறாக, ஆங்கிலத்தில் Nostalgia என்று கூறப்படும் நமது கடந்தகால நினைவுகள் மற்றும் உணர்வுகள் நமது வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை பற்றியதாகும். நான் இந்த தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளை படித்த பின் ஓரளவு ஏற்பட்ட தெளிவை வாசகர்களுடன் பங்கு பெறவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.. .

மீண்டும் மீண்டும் தோன்றும் கடந்தகால நினைவுகள் நமது நீண்ட கால நட்பையும் உறவுகளையும் எவ்வாறு பாதிக்கின்றன? இந்த கேள்வியை அறிவாற்றல் மற்றும் மன எதிர்வினை” (Cognition and Emotion) என்ற  இதழில் பதிவாகி உள்ள ஒரு கட்டுரை ஆய்வு செய்கின்றது. அதன்படி, கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கும் நபர்கள் அதிக நண்பர்களைக் கொண்டுள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. மேலும் காலப்போக்கில் அவர்கள் தங்கள் பழைய நட்புகளை புதுப்பிக்க கடந்த கால நினைவுகள் உந்துதலாக இருக்கலாம் என்றும் கூறுகிறது. அந்த ஆய்வை மேற்கொண்ட கியோட்டோ பல்கலைக் கழக ஆய்வு ஆசிரியரும் உளவியல் பட்டதாரி மாணவருமான குவான்-ஜு ஹுவாங் அளித்த ஒரு செய்தி குறிப்பு, கடந்த காலத்தை பற்றி சிந்திப்போர் அவர்கள் வயதாகும்போது கூட அவர்களின் நட்புகளை நீடிக்க வாய்ப்புக்கள் அதிகம் கூறுகிறது.

ஹுவாங்கின் கூற்றுப்படி, நீண்டகால நட்புகள் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகின்றன. அவை மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகின்றன. அந்த நட்பைப் பேணுவதில் கடந்த கால நினைவுகள் ஒரு பங்கைக் கொண்டிருந்தால், அதைவிடச் சிறந்தது ஆகும்.

நண்பர்களைக் கொண்டவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், தங்கள் வாழ்க்கையில் அதிக திருப்தியுடனும் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அவர்கள் நீண்ட காலம் வாழவும் வாய்ப்புள் அதிகம். நமக்கு வயதாகும்போது கடந்தகால நட்புகள் மங்கி விடுகின்றன.​​காலப்போக்கில் நம் நட்பைப் தக்க வைத்துக் கொள்ள எது நமக்கு உதவுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள, ஹுவாங்கும் அவர் சகாவான நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர் யா-ஹுய் சாங் சுமார் 1,500 நபர்களிடயே ஒரு ஆய்வு நடத்தினர்.  அதன்படி, கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்கும் போக்கு அதிகம் உள்ள மக்களிடையே அவர்களின் நட்பைப் பராமரிக்கவும், நீண்ட காலத்திற்கு தக்க வைக்கும் திறன் அதிகமாக காணப்பட்டது..    

எல் ஐ எஸ் எஸ் (Longitudinal Internet Studies for Social Sciences) எனப்படும்  சமூக அறிவியலுக்கான நீண்டகால இணைய ஆய்வுகள் கணக்கெடுப்பின் பதில்களில் ஹுவாங் மற்றும் சாங் தாங்கள் கண்டறிந்த முடிவுகளுக்கு கூடுதல் ஆதரவைக் கண்டறிந்தனர், அதன்படி, கடந்தகால நினைவுகளை கொண்ட பங்கேற்பாளர்கள் ஏழு ஆண்டுகளில் தங்கள் வலுவான சமூக உறவுகளை, மற்றவர்களை விட அதிகமாக பராமரித்து வந்ததைக் காட்டியது.

நெதர்லாந்தில் பங்கேற்பாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இந்த பதில்கள், அவர்கள் வயதாகும்போது அதிகம் கடந்த காலத்தை நினைவுகளை கொண்டவர்களாக மாறினர் என்று காட்டுகிறது.

ஹுவாங் மற்றும் சாங்கின் ஆய்வுகள், கடந்தகால உணர்வுகள் எல்லா வயதினரிடமும், வெவ்வேறு அளவுகளில் காணப்படுவதாகக் கூறுகின்றன. நடுத்தர வயதுடையவர்களை விட இளைஞர்கள் கடந்த கால உணர்வுகளை காட்டுவதற்கு சான்றுகள் உள்ளன, அதே நேரத்தில் வயதானவர்கள் வியத்தகு முறையில் அதிக அளவிலான ஏக்கங்களைப் புகாரளிக்கின்றனர்,” என்று ஹுவாங் தனது செய்திக்குறிப்பில் கூறினார்.

ந்த சூழ்நிலையிலும், வயது எதுவாக இருந்தாலும், நமது கடந்த கால உணர்வுகள் ஒரே சமூக விளைவுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே அதிக நண்பர்கள் மற்றும் அந்த நட்பைப் பராமரிக்க அதிக உந்துதல் அளிப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.-

Thursday, 6 March 2025

வேலையைப் பிடுங்கிக் கொள்ளுமா ஏஐ?

 


கர்னல் ஆர் ஹரிஹரன் | அந்தி மழை | சிறப்புக் கட்டுரை மார்ச் 3, 2025  

https://www.andhimazhai.com/special-section/special-stories/will-ai-take-over-jobs

ஏ.ஐ. என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தற்போது அதிகம் பேசு பொருளாகிவிட்டது. எளிதாக விளக்கம் கூறினால் ஏ.ஐ. என்பது இயந்திரங்கள் மனிதர்களைப் போல கற்றுக்கொள்ளவும், பகுத்தறிந்து செயல்படவும் அனுமதிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். ஏ.ஐ. அமைப்புகளால் தரவைச் செயலாக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், அவற்றின் நடத்தையை மாற்றியமைக்கவும் முடியும்.

ஏ.ஐ உபயோகம். ஏற்கனவே அசுர வேகத்தில் அதிகரித்து வருவதால் அதனால் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்று அறிவதில் எல்லா நாடுகளும் நாட்டம் காட்டி வருகின்றன. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று ட்ரஸ்ட் (TRUST) என்று கூறப்படும் “மூலோபாயத் தொழில் நுட்பத்தை பயன்டுத்தி உறவை மாற்றுதல்” ஒப்பந்தமாகும். இதன்படி இந்தியாவும் அமெரிக்காவும் இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்கட்டமைப்பை விரைவுபடுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளன. அதன் செயலாக்கம் பாதுகாப்பு, எரி சக்தி, விண்வெளி ஆகிய துறைகளைத் தவிர உயர் தொழில் நுட்பத்துறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆகவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் செயல்முறைகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இதனால் தற்போதைய வேலைகளில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் உலக அளவில் வேலை வாய்ப்பில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை அனுமானிக்க கடந்த ஜனவரி 7 ஆம் தேதி உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வேலைகளின் எதிர்கால அறிக்கை: 2025 (Future of Jobs report 2025) என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உலகில் உள்ள 22 தொழில்கள் சார்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஆய்வு செய்த பிறகு தயார் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் குறைந்து வரும் வேலைத் துறைகளின் பட்டியல்கள் உள்ளன. இவை வரும் ஆண்டுகளில் உலக சந்தையின் பல்வேறு தொழில்களில் வேலைகளின் போக்குகள் மற்றும் அவற்றில் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் விவரிக்கின்றன. மக்கள்தொகை மாற்றங்கள், புவிசார் அரசியல் மோதல்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வரும் ஆண்டுகளில் எந்தெந்த தொழில்கள் ஆதிக்கம் செலுத்தும் என்பது குறித்து சமூக ஊடகங்களில் ஏராளமான பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. உ.பொ.மன்ற அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்

முதலாவதாக, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 170 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அறிக்கை கணித்துள்ளது. இருப்பினும், இதே கால அளவில், தோராயமாக 92 மில்லியன் பேர் வேலை இழக்க வாய்ப்புண்டு. கூட்டி கழித்துப் பார்த்தால், உலகில் 78 மில்லியன் நிகர புதிய வேலைகள் உருவாக வாய்ப்புகள் அதிகம்.

இவற்றில் ஐந்து வேலைகளில் ஆள்களுக்கான தேவைகள் சிறப்பான வளர்ச்சியைக் காணும். இதில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இலகுரக டிரக் அல்லது விநியோக சேவை ஓட்டுநர்கள், மென்பொருள் மற்றும் பயன்பாட்டு உருவாக்குனர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் கடை விற்பனையாளர்கள் ஆகியவை அடங்கும்.

பல நாடுகள் மிகவும் நிலையான எதிர்காலத்திற்காக எடுத்துவரும் பசுமை முயற்சிகளால் விவசாயத் துறையில் வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இவற்றைத் தொடர்ந்து உணவு பதப்படுத்துதல் மற்றும் அதில் தொடர்புடைய தொழிலாளர்கள்; கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்; நர்சிங் நிபுணர்கள்; உணவு மற்றும் பான சேவை ஊழியர்கள்; செயல்பாட்டு மேலாளர்கள்; சமூகப் பணி மற்றும் ஆலோசனை நிபுணர்கள்; திட்ட மேலாளர்கள், பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி ஆசிரியர்கள்; இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள்; மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு உதவியாளர்கள் இவர்களின் தேவை அதிகரிக்கும்.

பின்வரும் வேலைகள் அடுத்த பத்தாண்டுகளில் மிக வேகமாக வளரும் என்று அறிக்கை கூறுகிறது: செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவுப் (Big data) புரட்சி இதன் பின்னணியில் இருக்கும். பெருந்தரவு நிபுணர்கள், நிதி தொழில்நுட்ப பொறியாளர்கள், இயந்திர கற்றல் நிபுணர்கள், மென்பொருள் மற்றும் பயன்பாட்டு உருவாக்குநர்கள் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை நிபுணர்கள் ஆகிய ஐந்து வேலைவாய்ப்புகள் வளரும். அதிக சம்பளம் பெறுகிறவர்களாக இவர்கள் மாறுவர்.

இதற்கு மாறாக, பல பாரம்பரிய ஆபீஸ் வேலைகள் வேகமாக குறைந்து வரும் வேலைகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. தபால் சேவை ஊழியர்கள், வங்கி காசாளர்கள் மற்றும் உதவியாளர்கள், தரவு உள்ளீட்டு செயல்முறை ஆக்குநர், நிர்வாக உதவியாளர்கள் மற்றும் நிர்வாக செயலாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவார்கள். இந்த வீழ்ச்சியடைந்து வரும் போக்கால் மிகவும் பாதிக்கப்படும் மற்றொரு வேலை கிராஃபிக் டிசைனர். ஏ.ஐ உபயோகம் ஒவ்வொரு நாளும் அதன் மாயாஜாலத்தை புதிய உயரத்திற்கு உயர்த்துவதால், இந்த படைப்பு நிபுணர்களின் வேலை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

வேலையில் தேவைப்படும் திறன்களில் கிட்டத்தட்ட 40 சதவீத மாற்றம் ஏற்பட உள்ளது. ஏற்கனவே, 63 சதவீத முதலாளிகள் அதை தாங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான தடையாக குறிப்பிடுகின்றனர். ஏ.ஐ. நம் வாழ்க்கையை இருண்டதாக மாற்றிவிடும் என்று எண்ண வேண்டாம். ஏனெனில், எதிர்காலத்தில் தேவையான மற்றும் விரும்பத்தக்கதாகக் கருதப்படும் திறன்களின் பட்டியலில், முன்னணியில் இருப்பவை மனிதர்களுக்கே உரிய பின்வரும் திறன்களாகும். அதில் பகுப்பாய்வு சிந்தனை முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து மீள்தன்மை(resilience), நெகிழ்வுத்தன்மை(flexibility), சுறுசுறுப்பு(agility) ஆகியவை வரும் ஆண்டுகளில் தேவைப்படும் சில முக்கிய திறன்களாகும்.

மேலும் தலைமைத்துவம் மற்றும் சமூக செல்வாக்கு, படைப்பு சிந்தனை, ஊக்கம் மற்றும் சுய விழிப்புணர்வு கொண்டிருத்தல், தொழில்நுட்ப கல்வியறிவு, பச்சாதாபம் காட்டுதல், ஆர்வம், வாழ்நாள் முழுவதும் கற்றல், திறமை மேலாண்மை, சேவை நோக்குநிலை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவை முக்கிய திறன்களாகும். எனவே, வரும் ஆண்டுகளில் உலகளாவிய வேலை சந்தைப் புரட்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது தான் ஒரே வழியாகும்.

பீதி தேவையில்லை. எல்லோரும் சொல்வது போல், ஏ.ஐ உங்கள் வேலையை எடுத்துக் கொள்ளாது, ஆனால், எவ்வாறு ஏ.ஐ-யை பயன்படுத்துவது என்று தெரிந்த ஒருவர் உங்கள் வேலையை எடுத்துக்கொள்ளலாம்!

(கர்னல் ஹரிஹரன், தெற்காசிய பாதுகாப்பு விவகார வல்லுநர்)